54 வயதில் திருமணம் செய்த நடிகர்.. மனைவி 17 வருடம் இளையவர்.. விஜய் தேவரகொண்டா பட நடிகர் யார் தெரியுமா?
இந்த நடிகர் 54வது வயதில் தன்னை விட 17 வயது இளையவரை திருமணம் செய்துகொண்டார்.
இரு மனங்கள் ஒன்றிணைய சாதி, மதம், இனம் எதுவும் தடையாக இருப்பதில்லை. அத்துடன் வயதையும் சேர்த்து கொள்ளலாம். ஒருவருக்கு ஒருவர் நேசித்து, அவர்களுக்குள் ஒத்துப்போனால், திருமணங்கள் சாத்தியமே. அதற்கு பல உதாரணங்களை பார்க்க முடியும். குறிப்பாக சினிமாவில் இருக்கும் நடிகர்கள், நடிகைகள் வயது கடந்த திருமணங்களை சர்வ சாதாரணமாக செய்கிறார்கள். அப்படித்தான் இந்த நடிகர் 54 வயதில் தன்னை விட 17 வயது இளையவரை திருமணம் செய்துகொண்டார்.
தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் கடந்த ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்ற படம் ‘கிங்டம்’. இந்தப் படத்தில் நடித்திருந்தவர் மனிஷ் சௌத்ரி. சீனியர் நடிகரான இவர் பாலிவுட்டில் தான் தன்னுடைய கரியரை தொடங்கினார். கடந்த 2003-ம் ஆண்டிலிருந்து இந்தி, தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வருகிறார். அண்மையில் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் இயக்கிய‘Ba***ds of Bollywood’ வெப்சீரிஸில் நடித்து கவனம் பெற்றார்.
இவருக்கு கடந்த 2016-ம் ஆண்டு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஆனால், சில காரணங்களால் இந்த திருமணம் நடைபெறவில்லை. அதன் பிறகு 7 ஆண்டுகளாக திருமணமே செய்யாமல் இருந்தார். கடந்த 2023-ம் ஆண்டு தன்னுடைய 54 வயதில், ஸ்ருதி மிஸ்ரா என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஸ்ருதிக்கு அப்போது வயது 37. இருவருக்கும் இடையில் 17 ஆண்டுகள் வயது வித்தியாசம்.
மனிஷ் சௌத்ரி தன்னை விட 17 வயது இளையவரை திருமணம் செய்துகொண்டது பேசுபொருளானது. இது தொடர்பாக பேட்டி ஒன்றில் பேசியிருந்த நடிகர் மனிஷ் சௌத்ரி, “எங்களுக்கு இந்த வயசு வித்தியாசம் பெரிய பிரச்சினையாக இருக்கவில்லை. ஆனால், ஸ்ருதிக்கு அவரது வீட்டில் உள்ளவர்களை சமாதானப்படுத்த 2 ஆண்டுகள் தேவைப்பட்டது” என்றார்.
மனைவி ஸ்ருதி கூறுகையில், “மும்பையில் உள்ள திரையரங்கில் தான் அவரை முதன்முறையாக பார்த்தேன். எங்கள் இருவருக்கும் 17 ஆண்டுகள் வயது வித்தியாசம் என்பது எனக்கு தெரியும். நான் அவரிடம் உங்கள் வயது என்ன என்று கேட்டேன். அவர் சொன்னதும் ஆச்சரியப்பட்டேன். எங்களுக்கு இடையிலான இந்த வயது வித்தியாசம் எங்களை எந்த வகையிலும் தொந்தரவு செய்யவில்லை. எங்களுடைய முதல் உரையாடலில், ‘எனக்கு வயது வித்தியாசம் குறித்தெல்லாம் கவலையில்லை. நீ என்னைவிட நீண்ட நாட்கள் வாழ வேண்டும். காரணம் நீ இல்லாமல் என்னால் இருக்க முடியாது. நான் சென்றுவிடுகிறேன்’ என அவர் கூறினேன்” என்கிறார் ஸ்ருதி.
மேலும் அவர் கூறுகையில், “எங்களுக்குள் எந்த பிரச்சினையும் இல்லை என்றாலும், வீட்டில் உள்ளவர்களை சம்மதிக்க வைக்க 2 ஆண்டுகள் தேவைபட்டது. முதலில் வீட்டில் மறுத்தார்கள். பின்பு, இவரைத்தான் திருமணம் செய்துகொள்ளப் போகிறேன் என நான் உறுதியாக சொன்னேன். அப்படி இல்லாவிட்டால் திருமணமே வேண்டாம் என கூறிவிட்டேன். அதன் பிறகு அவர்கள் மனம் மாறியது. வீட்டில் உள்ளவர்கள் சம்மதிக்க 2 ஆண்டுகள் ஆனது. அதன் பிறகு இரு வீட்டார் சம்மதத்துடன் நாங்கள் திருமணம் முடித்தோம்” என்றார்.