2வது குழந்தை பிறக்க போவதை அறிவித்த இயக்குநர் அட்லீ!

2வது குழந்தை பிறக்க போவதை அறிவித்த இயக்குநர் அட்லீ!

இயக்குநர் அட்லீ மற்றும் பிரியா தம்பதி தங்களுக்கு இரண்டாவது குழந்தை பிறக்க போவதை அறிவித்துள்ளனர்.

2014 ஆம் தனது காதலி மற்றும் நடிகையுமான ப்ரியாவை கரம்பிடித்தார் அட்லீ. இந்த தம்பதிக்கு கடந்த 2023ம் ஆண்டு மீர் என்ற ஆண் குழந்தை பிறந்தது.2014 ஆம் தனது காதலி மற்றும் நடிகையுமான ப்ரியாவை கரம்பிடித்தார் அட்லீ. இந்த தம்பதிக்கு கடந்த 2023ம் ஆண்டு மீர் என்ற ஆண் குழந்தை பிறந்தது.

தனது குழந்தையின் முதல் பிறந்தநாளை பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரீஸ் நகரத்தில் இடம்பெற்றுள்ள டிஸ்னி லேண்ட் தீம் பார்க்கில் கோலாகலமாக தனது மனைவி பிரியாவுடன் சென்று கொண்டாடினார் அட்லீ. இந்த நிலையில் தான் இரண்டாவது குழந்தையை வரவேற்க காத்திருப்பதாக அட்லீ தெரிவித்திருக்கிறார்.

தனது வலைதளத்தில் மனைவி பிரியா இரண்டாவது முறையாக கர்ப்பிணியாகி இருப்பதை அறிவித்துள்ள அட்லீ, "எங்கள் குடும்பத்தில் புதிய உறுப்பினரின் வருகையோடு, எங்கள் இல்லம் இன்னும் அழகாகவும் மகிழ்ச்சியாகவும் மாறப்போகிறது. ஆம்! நாங்கள் மீண்டும் ஒரு குழந்தையை எதிர்பார்க்கிறோம். உங்கள் அனைவரின் அன்பு, ஆதரவு மற்றும் பிரார்த்தனைகள் எங்களுக்குத் தேவை. அன்புடன், அட்லீ, பிரியா, மீர், பெக்கி, யூகி, சோக்கி, காபி மற்றும் குஃபி." என்று பதிவிட்டு குடும்பத்தின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அட்லீ மற்றும் பிரியாவுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.