BREAKING: ஒருநாள் கிரிக்கெட்டில் 52வது சதம்.. கோலி அசத்தல்

BREAKING: ஒருநாள் கிரிக்கெட்டில் 52வது சதம்.. கோலி அசத்தல்

ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தனது 52வது சதத்தை விளாசினார்.

தென்னாப்பிரிக்க அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட், ஒருநாள், டி20 கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வருகிறது.

இதில் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி, ராஞ்சியில் இன்று நடக்கிறது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

ஜெய்ஸ்வால் 18, ரோஹித் சர்மா 57, கெய்க்வாட் 8, வாசிங்டன் சுந்தர் 13 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இருப்பினும் விராட் கோலி சிறப்பாக விளையாடினார். தொடர்ந்து சீரான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், ஒருநாள் கிரிக்கெட்டில் 52வது  சதத்தை பதிவு செய்தார்.

102 பந்துகளில் 103 ரன்களை கோலி அடித்தார். இதில் 7 பவுண்டரிகள், 5 சிக்சர்கள் ஆகியவையும் அடங்கும். சதத்தை பதிவு செய்தபிறகு அதிரடியாக கோலி விளையாடினார். அடுத்தடுத்து பவுண்டரிகள், சிக்சரை விளாசிய அவர், 120 பந்துகளில் 135 ரன்களை விளாசிய நிலையில் ஆட்டமிழந்து வெளியேறி அதிர்ச்சியளித்தார்.