யு19 உலகக் கோப்பை 2026: ஆயுஷ் மாத்ரே அதிரடியில் இந்தியா ஹாட்ரிக் வெற்றி

நடப்பு யு19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தொடர்ச்சியாக மூன்றாவது வெற்றியை பதிவு செய்துள்ளது. நடப்பு யு19 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தொடர்ச்சியாக மூன்றாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.

யு19 உலகக் கோப்பை 2026: ஆயுஷ் மாத்ரே அதிரடியில் இந்தியா ஹாட்ரிக் வெற்றி

 நியூசிலாந்துக்கு எதிரான யு19 உலகக்கோப்பை லீக் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

ஐசிசி ஆடவர் யு19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் குரூப் பி பிரிவில் இடம் பிடித்துள்ள இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. புலவாயோவில் நடைபெற்ற இந்த ஆட்டம் மழை காரணமாக 37 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது.

அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து யு19 அணிக்கு தொடக்கம் சிறப்பானதாக அமையவில்லை. அணியின் டாப் ஆர்டர் வீரர்கள் ஆர்யன் மாண் 5 ரன்களிலும், ஹுகோ போக் 4 ரன்களிலும், கேப்டன் டாம் ஜோன்ஸ் 2 ரன்களிலும், மார்கோ அல்ப் ஒரு ரன்னிலும், ஸ்னேஹித் ரெட்டி 10 ரன்களிலும், ஜேக்கப் காட்டர் 23 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர்.

அதன்பின் இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில் ஆரோன் ஜார்ஜ் 7 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் ஜோடி சேர்ந்த அணியின் கேப்டன் ஆயுஷ் மாத்ரே மற்றும் துணைக்கேப்டன் வைபவ் சூர்யவன்ஷி இருவரும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் இருவரும் அடுத்தடுத்து பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் பறக்கவிட அணியின் வெற்றியும் உறுதியானது.

பின்னர் ஜோடி சேர்ந்த விஹான் மல்ஹோத்ரா - வேதந்த் திரிவேதி இணை அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த விஹான் மல்ஹோத்ரா 17 ரன்களையும், வேதந்த் திரிவேதி 13 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன் மூலம் இந்திய யு19 அணி 13.3 ஓவர்களிலேயே இலக்கை எட்டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து யு19 அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் நடப்பு யு19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தொடர்ச்சியாக மூன்றாவது வெற்றியை பதிவு செய்துள்ளது. இதற்கு முன் அமெரிக்காவுக்கு எதிராக 6 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், வங்கதேசத்திற்கு எதிராக 18 ரன்கள் வித்தியாசத்திலும் இந்திய அணி வெற்றியை பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.