டி20 அணிக்கு திரும்பினார் பாபர் அஸம்!
டி20 உலகக் கோப்பை தொடருக்கு தயாராகும் வகையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அடுத்த வாரம் பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்து 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரின் ஆட்டங்கள் லாகூரில் வரும் 29, 31 மற்றும் பிப்ரவரி 1-ம் தேதிகளில் நடைபெற உள்ளன.
இந்த தொடருக்கான 17 பேர் கொண்ட பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சமீபத்தில் இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் இடம் பெறாத அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேன் பாபர் அஸம், வேகப்பந்து வீச்சாளர் ஷாஹீன் ஷா அப்ரிடி ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். 6 மாதங்களுக்கு பிறகு ஷதப் கானும் அணிக்கு திரும்பி உள்ளார்.
பாகிஸ்தான் அணி விவரம்: சல்மான் அலி ஆகா (கேப்டன்), அப்ரார் அகமது, பாபர் அஸம், ஃபஹீம் அஷ்ரஃப், ஃபகர் ஜமான், கவாஜா முகமது நஃபே, முகமது நவாஸ், முகமது சல்மான் மிர்சா, முகமது வாசிம் ஜூனியர், நசீம் ஷா, சாஹிப்சாதா ஃபர்ஹான், சைம் அயூப், ஷாஹீன் ஷா அப்ரிடி, ஷதப் கான், உஸ்மான் கான், உஸ்மான் தாரிக்.