இரண்டாவது டி20: சதமடித்து மிரட்டிய குயின்டன் டி காக்; தொடரை வென்றது தென்னாப்பிரிக்கா

இரண்டாவது டி20: சதமடித்து மிரட்டிய குயின்டன் டி காக்; தொடரை வென்றது தென்னாப்பிரிக்கா

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் தென்னாப்பிரிக்க அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், 2-0 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியுள்ளது.

ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இன்னும் சில தினங்களில் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ளது. இந்த தொடரில் பங்கேற்கும் அணிகள் தீவிரமாக தயாராகி வருகின்றனர். அந்த வகையில் முன்னாள் சாம்பியன்களான வெஸ்ட் இண்டீஸ் அணி தற்சமயம் தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகளை உள்ளடக்கிய டி20 தொடரில் விளையாடி வருகிறது.

இதில் நடந்து முடிந்த முதல் டி20 போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற்ற நிலையில், இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டி20 போட்டி செஞ்சூரியனில் உள்ள சூப்பர் ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. இதனையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் கேப்டன் ஷாய் ஹோப் 4 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.

அவருடன் இணைந்த ரொமாரியோ ஷெஃபெர்டும் 17 ரன்களை எடுத்திருந்தார். இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 221 ரன்களை சேர்த்தது. தென்னாப்பிரிக்க அணி தரப்பில் கேசவ் மஹாராஜ் 2 விக்கெட்டுகளை கைப்பற்றிய நிலையில், காகிசோ ரபாடா மற்றும் மார்கோ ஜான்சன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

பின்னர் 6 பவுண்டரிகள், 10 சிக்ஸர்கள் என 115 ரன்களைச் சேர்த்து விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய டெவல்ட் பிரெவிஸும் 4 ரன்களில் நடையைக் கட்ட, இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரியான் ரிக்கெல்டன் 9 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 77 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார். இதன் மூலம் தென்னாப்பிரிக்க அணி 17. 3 ஓவர்களில் இலக்கை எட்டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் தென்னாப்பிரிக்க அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இந்த போட்டியில் சதமடித்து அணியின் வெற்றிக்கு உதவிய குயின்டன் டி காக் ஆட்டநாயகன் விருதை வென்றார். இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது டி20 போட்டி நாளை ஜொஹன்னஸ்பர்க்கில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.