அலிசா ஹீலி சதம் விளாசல்: ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி

உலக கோப்பை லீக் போட்டியில் கேப்டன் அலிசா ஹீலி சதம் கைகொடுக்க, ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா, இலங்கையில், பெண்களுக்கான உலக கோப்பை (50 ஓவர்) 13வது சீசன் நடக்கிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. விசாகப்பட்டனத்தில் நடந்த லீக் போட்டியில் வங்கதேசம், 'நடப்பு சாம்பியன்' ஆஸ்திரேலியா அணிகள் மோதின.
சுலப இலக்கை விரட்டிய ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டன் அலிசா ஹீலி, லிட்ச்பீல்டு ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. லீட்ச்பீல்டு அரைசதம் கடந்தார். அபாரமாக ஆடிய அலிசா, 73 பந்தில் சதம் எட்டினார். பரிஹா பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய லிட்ச்பீல்டு வெற்றியை உறுதி செய்தார்.
ஆஸ்திரேலிய அணி 24.5 ஓவரில் 202/0 ரன் எடுத்து வெற்றி பெற்றது. அலிசா (113), லீட்ச்பீல்டு (84) அவுட்டாகாமல் இருந்தனர்.
புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலியா (9 புள்ளி) முதலிடத்துக்கு முன்னேறியது. அடுத்த மூன்று இடங்களில் இங்கிலாந்து (7), தென் ஆப்ரிக்கா (6), இந்தியா (4) உள்ளன.