ஐந்தாவது டி20: டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது இந்தியா
நியூசிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி தற்சமயம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த முதல் நான்கு டி20 போட்டிகளின் முடிவில் இந்திய அணி மூன்று போட்டியிலும், நியூசிலாந்து அணி ஒரு போட்டியிலும் வெற்றியை பதிவு செய்துள்ளன.
இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான ஐந்தாவது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று திருவனந்தபுரத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது. இன்றைய போட்டிக்கான இந்திய அணியில் இஷன் கிஷன், அக்ஸர் படேல் மற்றும் வருண் சக்ரவர்த்தி உள்ளிட்டோர் பிளேயிங் லெவனிற்கு திரும்பியுள்ளனர்.
மறுபக்கம் நியூசிலாந்து அணியில் ஃபின் ஆலன், ஜிம்மி நீஷம், கைல் ஜேமிசன் மற்றும் லோக்கி ஃபெர்குசன் உள்ளிட்டோருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் ஏற்கெனவே இந்திய அணி தொடரை வென்றுள்ள நிலையில், இந்த போட்டியிலும் வெற்றி பெற்று ஆதிக்கத்தை தொடருமா? என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
பிளேயிங் லெவன்
இந்தியா: அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஷிவம் துபே, ஹர்திக் பாண்டியா, ரிங்கு சிங், அக்ஸர் படெல், வருண் சக்ரவர்த்தி, அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா.
நேருக்கு நேர்
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இரு அணிகளும் இதுவரை 29 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் இந்திய அணி 17 போட்டிகளில் வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தியுள்ளது. அதே சமயம் நியூசிலாந்து அணி 11 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில், ஒரு போட்டியில் முடிவு எட்டப்படவில்லை.
க்ரீன் ஃபீல்ட் கிரிக்கெட் மைதானம்
திருவனந்தபுரத்தில் உள்ள விடிசிஏ கிரிக்கெட் மைதானத்தில் இதுவரை 7 சர்வதேச டி20 போட்டிகள் நடைபெற்றுள்ளது. இதில் முதலில் பேட்டிங் செய்த அணிகள் 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருக்கும் நிலையில், சேஸிங் செய்த அணிகள் 3 போட்டிகளில் வெற்றியை பதிவு செய்துள்ளன.