ரயில்வேயில் வேலை... உடனே விண்ணப்பிங்க

ரயில்வேயில் வேலை... உடனே விண்ணப்பிங்க
ரயில்வே துறையில் 22,000 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ரயில்வேயில் 10-ஆம் வகுப்பு தகுதி கொண்ட குரூப்-டி பிரிவில் 22,000 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ரயில்வே தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் ஆர்.ஆர்.பி. எனப்படும் ரயில்வே தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்படுகிறது.
அந்த வகையில், தண்டவாள பராமரிப்புப் பணிகள் மற்றும் பல்வேறு பொறியியல் துறைகளில் உதவியாளர் பணிகளில் 22 ஆயிரம் காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை இந்திய ரயில்வே தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.
இதில், சென்னையை தலைமையிடமாகக் கொண்ட தெற்கு ரயில்வேயில் 1036 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இத்தேர்வுக்கு பத்தாம் வகுப்பு அல்லது ஐடிஐ முடித்த 18 முதல் 33 வயதிற்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள்  மார்ச் 2-ஆம் தேதி வரை ஆன்லைன் வாயிலாக குரூப்-டி தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
மேலும் விவரங்களுக்கு தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.