லித்தியம் பேட்டரி தீ அபாயம் காரணமாக விமானத்தில் பவர் பேங்க் பயன்படுத்த எமிரேட்ஸ் தடை
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் தேசிய விமான நிறுவனமான எமிரேட்ஸ், அக்டோபர் 1, 2025 முதல் நடைமுறைக்கு வரும் ஒரு முக்கியமான புதிய பாதுகாப்பு நடவடிக்கையை அறிவித்துள்ளது. இதன் கீழ், தங்கள் விமானங்களில் பயணிகள் பவர் பேங்க்குகளைப் பயன்படுத்த விமான நிறுவனம் தடை விதித்துள்ளது.
உலகளாவிய விமானத் துறையில் லித்தியம் பேட்டரிகள் தொடர்பான சம்பவங்கள் அதிகரித்து வருவதால், இந்தத் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறையின்படி, பயணிகள் 100 வாட்டிற்கும் குறைவான ஒரு பவர் பேங்கை மட்டுமே கைப்பெட்டியில் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். ஆனால், பயணம் முழுவதும் அந்த சாதனத்தைப் பயன்படுத்தவே கூடாது. இதன் பொருள், பயணிகள் தங்கள் ஸ்மார்ட்போன்கள் அல்லது டேப்லெட்டுகளை சார்ஜ் செய்ய பவர் பேங்க்களைப் பயன்படுத்த முடியாது.