விஜய்க்கு என்ன பயம்? நண்பர் சஞ்சீவ் அதிரடி கேள்வி!

விஜய்க்கு என்ன பயம்? நண்பர் சஞ்சீவ் அதிரடி கேள்வி!

விஜய் சரியான நேரம் வரும்போது செய்தியாளர்களை சந்திப்பார் என்று அவரது நண்பரும், நடிகருமான சஞ்சீவ் கூறியுள்ளார்.

பவண் இயக்கத்தில் கண்ணா ரவி, சஞ்சீவ், ஸ்ரவ்னீதா ஸ்ரீகாந்த், ஐஸ்வர்யா ரகுபதி, வினுஷா தேவி, ஜீவா ரவி, லாவண்யா, ரேகா நாயர் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் ’வேடுவன்’. போலீஸ் என்கவுண்டர் த்ரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள இந்த வெப் சீரியஸ் நாளை (அக்டோபர் 10ஆம் தேதி) ஜீ5 ஓடிடியில் வெளியாகிறது. இதுதொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

இயக்குநர் பவண் பேசுகையில், "ஒரு இயக்குநரின் நடிகர் என்றால் அது கண்ணா ரவி தான். இந்த சீரியஸ் எடுப்பதற்கு முன்பு பலரை கண்ணா ரவி கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க முயற்சி செய்தோம். ஆனால் இறுதியில் தான் கண்ணா ரவியை நடிக்க வைத்தோம். சஞ்சீவிடம் எப்போதுமே ஒரு யதார்த்தம் இருக்கும்.

இந்த நிகழ்ச்சியில் நடிகர் கண்ணா ரவி பேசுகையில், "ஃபிங்கர் டிப் சீரியஸில் நான் இயக்குநர் பவணுடன் இணைந்து நடித்திருந்தேன். அதன் பிறகு வேடுவன் சீரிஸிக்கு கதை கேட்கும்போது அவரை பார்த்தேன். இந்த சீரியஸின் ஒளிப்பதிவாளரை விட்டால் ஐம்பது நாள்களில் அவதாரையே எடுத்து விடுவார். பழகுவதற்கு எளிமையானவர் சஞ்சீவ். இந்த படக்குழுவை பார்க்கும்போது ரஜினி பட பாடலான ’சக்தி எல்லாம் ஒன்று சேர்ந்தாலே பாடல்’ போல அனைவரும் ஒன்று சேர்ந்து படைப்பை கொடுத்துள்ளனர்” என்றார்.

நடிகர் ‎சஞ்சீவ் பேசுகையில், "ஒரு அருமையான நடிகராக கண்ணா ரவி தென்னிந்திய சினிமாவிற்கு கிடைத்துள்ளதார். இந்த சீரியஸில் நான் அழகாக இருப்பதாக என் குழந்தைகள் கூறினார்கள். இந்த சீரியஸை மிகவும் கடின உழைப்போடு உருவாக்கியுள்ளோம் அனைவரும் நிச்சயம் பாருங்கள்” என்று கூறினார்.

அப்போது, '‎மேடையில் பேசும்போது உங்களுக்கு உடல்நிலை சரியில்லை' என்று கூறியிருந்தீர்களே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர். அத்துடன் உங்களுக்கு, 'உடல் மட்டும் சரியில்லையா, மனமும் சரியில்லையா? ஏனென்றால் உங்கள் நண்பர் விஜய் பங்கேற்ற பிரச்சாரத்தில் 41 பேர் உயிரிழந்துள்ளனர். அந்த சோகத்தில் இருக்கிறீர்களா என கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த சஞ்சீவ், "என் மனதும் வருத்தமாக உள்ளது. அதற்கு காரணம் அந்த பிரச்சார நெரிசலில் இறந்த 41 பேருக்காக தான். அதுகுறித்த விசாரணை நடந்து கொண்டு இருக்கிறது. விரைவில் உண்மை வெளிவரும் என்று நம்புகிறேன். நான் விபத்து நடந்த இடத்தில் இல்லாததால், அதை பற்றி பேசுவதற்கில்லை" என்று சஞ்சீவ் பதிலளித்தார்.

விஜய் செய்தியாளர்களை சந்திப்பாரா? என்ற கேள்விக்கு பதிலளித்த சஞ்சீவ், “விஜய்க்கு என்ன பயம்? சரியான நேரம் வரும்போது அவர் செய்தியாளர்களை சந்திப்பார்” என்று கூறினார்.