சற்று குறைந்த தங்கம் விலை! இன்று சவரன் எவ்வளவு?

சற்று குறைந்த தங்கம் விலை! இன்று சவரன் எவ்வளவு?

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.11,500-க்கும், சவரன் ரூ.92,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் கடந்த மாதம் உச்சம் தொட்டு நகை பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஆண்டின் இறுதிக்குள் லட்சத்தை தொடும் என எதிர்பார்க்கப்பட்ட தங்கம் விலை, தீபாவளி பண்டிகைக்கு பிறகு மெல்ல மெல்ல சரிவை சந்தித்தது. கடந்த 10 நாட்களில் நவம்பர் 13 ஆம் தேதி அதிகபட்சமாக ஒரு சவரன் தங்கம் ரூ.95,200-க்கு விற்பனை செய்யப்பட்டது.

நேற்றைய தினம் ஒரே நாளில் இரண்டு முறை தங்கம் விலை அதிகரித்தது. காலை நிலவரப்படி, தங்கம் விலை ஒரு கிராம் ரூ.11,500-க்கும், சவரன் ரூ.92,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து மாலை ரூ.100 மேலும் அதிகரித்து கிராம் ரூ.11,600-க்கும், சவரனுக்கு ரூ.800 அதிகரித்து ரூ.92,800-ல்லும் விற்பனையானது. இந்த நிலையில், தங்கம் விலை இன்று மீண்டும் சரிவை சந்தித்துள்ளது.

தங்கம் விலை:

அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (நவ.20) கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.11,500-க்கும், சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.92,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், 24 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.109 குறைந்து ஒரு கிராம் ரூ.12,545-க்கும், சவரனுக்கு ரூ.872 குறைந்து ரூ.100,360-க்கும் விற்பனையாகிறது. கடந்த 10 நாட்களில் 6 நாட்கள் தங்கம் விலை குறைந்தும், 2 நாட்கள் அதிகரித்தும் காணப்பட்டது.

வெள்ளி விலை:

வெள்ளி விலை கிராம் ரூ.176-க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று கிராமுக்கு ரூ.3 குறைந்து ஒரு கிராம் ரூ.173-க்கும், ஒரு கிலோ ரூ.1,73,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தை போன்று வெள்ளி விலையும் தொடர்ந்து ஏற்ற இறக்கத்தை கண்டு வருகிறது.