லாரி சக்கரத்தில் சிக்கி திமுக நிர்வாகி பலி... சென்னையில் சம்பவம்

லாரி சக்கரத்தில் சிக்கி திமுக நிர்வாகி பலி... சென்னையில் சம்பவம்

சென்னையில் லாரியை முந்​திச் செல்ல முயன்​ற​போது, லாரி சக்கரத்தில் சிக்கி திமுக நிர்​வாகி உயி​ரிழந்​தார்.

சென்னை சூளைமேடு பார​தி​யார் தெரு​வைச் சேர்ந்தவர் வெங்​கட சுப்​பிரமணி​யன். கட்​டிட ஒப்​பந்​த​தா​ரர். இவரது மகன் மோகன கிருஷ்ணன்​(32). கால் டாக்ஸி ஓட்​டுநர். மேலும், திமுக 106-வது வட்ட இளைஞரணி துணை அமைப்​பாள​ராக​வும் இருந்து வந்​தார்.

இந்​நிலை​யில், நேற்று முன்தினம் இரவு, அதே பகு​தி​யைச் சேர்ந்த தனது நண்​பர் கேசவன் என்​பவருடன் இருசக்கர வாக​னத்​தில் வடபழனி நோக்கி சென்​றார். திருநகர் பேருந்து நிறுத்​தம் அருகே 100 அடி சாலை​யில் சென்​ற​போது, அந்த வழி​யாக இரும்பு தகடுகளை ஏற்றி வந்து கொண்​டிருந்த லாரியை முந்​திச் செல்ல முயன்றார். அப்​போது, எதிர்​பா​ராத வித​மாக நிலைத் தடு​மாறி இரு​வரும் கீழே விழுந்​தனர். இதில், லாரி சக்​கரத்​தில் சிக்​கிக் கொண்ட மோகன கிருஷ்ணன், உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்​தார். கேசவன் படு​கா​யம் அடைந்​தார்.

தகவல் அறிந்து வந்த பாண்டி பஜார் போக்​கு​வரத்து புல​னாய்வுப் பிரிவு போலீ​ஸார், படுகாயம் அடைந்த கேசவனை மீட்டு கீழ்ப்பாக்​கம் அரசு மருத்​துவமனைக்கு சிகிச்​சைக்​காக அனுப்பி வைத்​தனர். உயி​ரிழந்த மோகன கிருஷ்ணன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்​காக மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர். மேலும், லாரி ஓட்​டுநரான விழுப்​புரம் மாவட்​டத்​தைச் சேர்ந்த சுதாகர்​(48) என்​பவரைக்​ கைது செய்​து வி​சா​ரணை நடத்​தி வருகின்​றனர்​.