மரண பீதி… ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது.. இந்த படத்தை ஓடிடியில் மிஸ் பண்ணாதீங்க!

மரண பீதி… ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது.. இந்த படத்தை ஓடிடியில் மிஸ் பண்ணாதீங்க!
உயிர் பிழைக்கும் போராட்டத்தில் கொஞ்சம் அசந்தாலும், பிழைப்பதற்கு வாய்ப்பில்லை. அப்படியான நிலையில், மகளை காக்க ரத்த வெறி கூட்டத்தை எதிர்கொள்கிறார் தந்தை. நொடிக்கு நொடி திக் திக் சம்பவங்களுடன், அடுத்து என்ன என்ற ஆர்வத்தை ஏற்படுத்தும் இந்தப் படம் வார இறுதியில் ஓடிடியில் பார்க்க த்ரில்லர் ரசிகர்களுக்கு ஏற்றது. என்ன படம் தெரியுமா?
1 மணி நேரம் 58 நிமிடம் ஓடும் இந்தப் படத்தின் பெயர் ‘ட்ரெய்ன் டூ பூசன்’ (train to busan). அமேசான் ப்ரைம் ஓடிடியில் தமிழ் டப்பிங்கில் காணக்கிடைக்கிறது. ஜாம்பி த்ரில்லரான ஜானரில் உருவாக்கப்பட்டுள்ள இப்படம் ஐஎம்டிபியில் 7.8 ரேட்டிங்கை பெற்றுள்ளது.  தென்கொரிய படமாக இப்படம் அமேசான் ப்ரைம் மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளங்களில் காணக்கிடைக்கிறது.
கடந்த 2016-ம் ஆண்டு தென்கொரியாவில் வெளியான இந்தப் படத்தின் கதையை பொறுத்தவரை, பெரும்பாலும் படம் ஒரே ரயிலில் நடக்கிறது. தந்தை (கதாநாயகன்) தனது மகளுடன் அவரது மனைவியை பார்க்க பூசனுக்கு ரயில் ஏறுகிறார். ஆனால் ரயில் புறப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, வைரஸால் பாதிக்கப்பட்ட ஒரு பெண் ரயிலில் யாருக்கும் தெரியாமல் ஏறி பயணித்து வருகிறார். அந்த பெண்ணிடம் இருக்கும் தொற்று பெட்டி முழுவதும் பரவுகிறது.
அப்பெண் ஜாம்பியாக மாறி, மற்ற பயணிகளையும் கடித்து விட மொத்த ரயிலுமே பதற்றமடைகிறது. கும்பல் கும்பலாக ஜாம்பிகள் கூட்டம் உருவாகிவிடுகிறது. இப்போது தனது மகளை காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் உயிர் பிழைக்கும் மற்றொரு தம்பதிகளுடன் இணைகிறார். தனது மகளைப் பாதுகாக்கும் தந்தையின் போராட்டம் ஒருபுறமும், தனது கர்ப்பிணி மனைவியை பாதுகாக்கும் மற்றொரு மனிதனின் போராட்டம் மறுபுறமுமாக விரிகிறது.
இருவரும் சேர்ந்து, வளர்ந்து வரும் ஜோம்பிஸ் கூட்டத்தை எதிர்த்துப் போராடுகின்றனர். படத்தின் எமோஷனலாக காட்சிகளும், இதயத்தை தொடும் கதாபாத்திர வடிவமைப்பும் படத்தின் முக்கிய அம்சங்கள். தியாகம், பயம், நம்பிக்கை, அன்பு.. என பல எமோஷனல்களை இந்தப் படம் வெளிப்படுத்துகிறது.
'ட்ரெய்ன் டு பூசன்' உலகளவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இது உலகளவில் $98.5 மில்லியன் (ரூ.841 கோடி) வசூலித்தது, இதில் தென் கொரியாவில் $80.5 மில்லியன் (ரூ.687 கோடி) வசூலித்தது. இது அமெரிக்கா, கனடா மற்றும் ஆசிய நாடுகளிலும் சிறப்பான வரவேற்பை பெற்றது. மலேசியா, சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் போன்ற நாடுகளில் அதிக வசூல் செய்த கொரிய படமாக இது சாதனை படைத்தது.