பதவிகள்: கிளை போஸ்ட் மாஸ்டர் (BPM), உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் (ABPM) / டக் சேவக்.
விண்ணப்பம் தொடங்கும் நாள்: 2026, ஜனவரி 31.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 2026, பிப்ரவரி 14.
கல்வித் தகுதி: 10-ஆம் வகுப்பு (SSLC) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணிதம் மற்றும் ஆங்கில பாடங்களை படித்திருக்க வேண்டும்.
மொழித் தகுதி: விண்ணப்பிக்கும் மாநிலத்தின் உள்ளூர் மொழியை (தமிழ்நாடு என்றால் தமிழ்) பத்தாம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும்.
கூடுதல் தகுதி: கணினி அறிவு மற்றும் மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு: குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 40 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
தேர்வு முறை: இந்த வேலைவாய்ப்பிற்கு எழுத்துத் தேர்வு அல்லது நேர்காணல் கிடையாது. விண்ணப்பதாரர்கள் தங்களின் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
சம்பள விவரம்:
BPM: ரூ. 12,000 முதல் ரூ.29,380 வரை
ABPM/GDS: ரூ. 10,000 முதல் ரூ.24,470 வரை