WAY-இல் கல்லா கட்டும் கோவிந்தா... உங்களுக்குத் தெரியுமா?

WAY-இல் கல்லா கட்டும் கோவிந்தா...  உங்களுக்குத் தெரியுமா?

ராஜூ பாய் என்றாலே அந்த WAY-இல் வேலை பார்ப்போருக்கு ஒரு காலத்தில் உதறல் எடுத்ததுண்டு. ஆனால் இப்போ? அப்படி உள்ளதா என்றால், இல்லை, பார்க்கும்போது சிரிப்புதான் வருகிறது என்கிறார் நமது கிருஷ்ணகிரி வசூல் ராஜா கோவிந்தா.

நமது இணையதளத்தில் வந்த 2 செய்திகளை (கீழே அந்த 2 செய்திகளின் லிங்க் உள்ளது) படித்த அந்த சகுனி, சக ஊழியர்களிடம் தன்னை விட்டால், செயலியில் வேலை பார்க்க (சாயி-யிடம் போட்டுக் கொடுக்க) விவரம் தெரிந்த ஆளில்லை, ஆதலால் சாய்-யே எனக்கு அடிமையாகி காலடியில் கிடக்கிறார் என நக்கலாக பேசியுள்ளான். 

கேலிக்கூத்தான அலுவலகம்: ஜி-பேயில் வசூல் குவிப்பது தெரிந்தும் அந்த கல்லா நபரை, பணியில் நிர்வாகம் வைத்திருப்பதை பார்த்த சக ஊழியர்கள், ஒரு வேளை சாய்-யும் பங்கு வாங்குகிறாரோ என சிரியாய் சிரிக்கின்றனர். அம்பத்தூர் நபர் தனக்கு போட்டியாக வந்துவிடக் கூடாது என ஒருபக்கமும், குவின் மூலம் மாவட்ட செய்திகளில் பணம் அடிப்பது தெரிந்து விடக்கூடாது என மறுபக்கமும், சாய் தவியாய் தவிப்பது அவரின் முகத்திலேயே அப்பட்டமாக தெரிவதாக அங்கிருப்போர் கிண்டலடிக்கின்றனர்.

ராஜூ பாய் அவர்களே, நீங்கள் உங்கள் நிறுவனத்தை சாதாரண எஸ்எம்எஸ்-சில் இருந்து மிகப்பெரிய செய்தி செயலி வரை கொண்டு வந்த திறமைக்காரர். உங்களுக்கு இந்த சல்லிப் பயல் சகுனி கோவி. தேவைதானா, இல்லை உங்களுக்கு வேறு ஆள் கிடைக்கவில்லையா ராஜூ பாய். 

தூண்டிவிட்ட சகுனி: ஓராண்டுக்கு முன்பு உங்கள் அலுவலகத்திற்கு எதிராக தொழிலாளர் நல ஆணையத்தில் ஒருவர் வழக்குத் தொடுத்த கதை அனைவரும் அறிந்தது. அதன்பிறகு இன்னொரு நபரை இதேபோல் வழக்குத் தொடுக்கும்படி, சகுனி கோவி தூண்டிவிட்டது உங்களுக்குத் தெரியுமா ராஜூ பாய். தேனி பெரியகுளம் பெரியவர் தியா-விடம், வழக்கம் போல கேட்பதை போல, இப்போதும் கேட்டுப் பாருங்கள், அனைத்தும் தெரியும்.

நீங்கள் வேலைக்கு வைத்திருக்கும் கெண்டை, உங்கள் வயிற்றுக்குள் போயி கொடிய விஷமாகும் முன்பு, உடனே தலையைப் பிடித்து வெளியேற்றி விடுங்கள். இல்லையேல் கெண்டை சகுனி கோவி, உங்கள் செயலி போல போட்டியாக, இன்னாெரு செயலியை உங்கள் அலுவலக கட்டிடம் இருக்கும் நகைக் கடையிலேயே ஆரம்பித்தாலும் ஆரம்பித்து விடுவான். 

மொட்டை உறுதி!: ராஜூ பாய் காலம் தாமதிக்காமல் தற்போதே விழித்து கொள்ளுங்கள், இல்லையேல் உங்களை கீழே உட்கார வைத்து கோவி மொட்டை போட்டு விட்டாலும் ஆச்சரியபடுவதற்கில்லை. ஜெய் WAY! 

https://punnagaiseithi.com/way2newsapp-news-app-dismiss-staffs-from-jobs-suddenly

https://punnagaiseithi.com/dismiss-from-hyderabad-app-shock-reveals