முதுநிலை ஆசிரியர்கள் நேரடி நியமனம்: பள்ளிகளில் காலி பணியிடங்கள் சேகரிப்பு
அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு, முதுநிலை ஆசிரியர்களை நேரடி நியமனம் செய்யும் வகையில், காலிப் பணியிடங்களின் விவரங்களை சேகரிக்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகம் சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்:
தமிழகத்தில் 2023- 24, 2024- 25ம் கல்வியாண்டுகளுக்கான முதுநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், தற்காலிக தகுதிப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. நேரடி நியமனம் வழங்கும் பொருட்டு, அரசு மேல்நிலைப் பள்ளிகளில், தற்போதைய நிலவரப்படி முதுநிலை ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர் நிலை-1, கணினி பயிற்றுநர் நிலை-1 ஆகியவற்றுக்கு நிரப்ப தகுந்த காலிப் பணியிட விவரங்களை எமிஸ் தளத்தில் பதி வேற்றம் செய்ய வேண்டும். ஏதாவது காலிப் பணியிடங்கள் விடுபட்டிருந்தது பின்னர் அறிய நேர்ந்தால், அந்தந்த மாவட்ட முதன் மைக் கல்வி அலுவலர்களே பொறுப்பேற்க நேரிடும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.