போட்டு கொடுத்தால் சம்பள உயர்வு! ஊழியர்களிடம் பேய் நூதன பேரம்! ஒத்தைக்காலனின் தில்லாலங்கடி!

போட்டு கொடுத்தால் சம்பள உயர்வு! ஊழியர்களிடம் பேய் நூதன பேரம்! ஒத்தைக்காலனின் தில்லாலங்கடி!

ஹைதராபாத்தில் உள்ள அந்த பலமொழி செய்தி செயலியில் வேலை செய்வோருக்கு நியாயமான சம்பள உயர்வு உண்டா என்றால், நிச்சயம் இல்லை எனலாம். வேலையில் சேரும்போதே அங்குள்ள மேலதிகாரி பேய், பல்ஸ் பார்த்துதான் வேலைக்கு எடுப்பார். புதிதாக வேலைக்கு வருபவர் பேய்-யிடம் போட்டுக் கொடுப்பார் என்றால், வருடத்திற்கு ரூ.5 ஆயிரம் சம்பள உயர்வு. இல்லையேல் ரூ.2 ஆயிரம்தான்.

பிழை திருத்தும் பணிக்கு வந்த கில்லாடி நெல்லை ஆசாமியிடம், போட்டுக் கொடுக்கும்படி பேய் ரகசியமாக பேரம் பேச, அதை அந்த நபர் அலுவலகம் முழுவதும் வேகமாக பரப்பி விட்டார். அதுவும் பேய் கண்காணிக்க சொன்னது, அனைவரும் பேய்யின் நண்பர்களை. இதை கேட்ட பேய்யின் நண்பர்கள் 2 பேர் (சீனியர்கள்) வேலையை விட்டு உடனே கிளம்பி விட்டனர். 2 பேரில் ஒருவர் ஒரு லட்சத்திற்கும் மேல் சம்பளம் வாங்கினார். இன்னொருவர் 80 ஆயிரம் வாங்கினார். ஆனால் நிம்மதிதான் தேவை, பேய்யோடு போராட முடியாது என அடுத்தடுத்து 2 பேரும் கிளம்பி விட்டனர்.

இந்த அனைத்திலும் கல்லுபோல நின்றவன் கல்லாபெட்டி மன்னன் ஒத்தைக்காலன் கோவி. செய்தி ஒவ்வொன்றுக்கும் ஜிபே மூலம் 200 ரூபாய் வாங்கினான் முதலில். பிறகு அலுவலகத்தில் தனக்கு போட்டியில்லை என தெரிந்ததும், தைரியமாக ஆயிரக்கணக்கிலும் தற்போது லட்சக்கணக்கிலும் வாங்கி கொண்டிருக்கிறான். தன்னை செயலி நிர்வாகம், வேலையை விட்டு விரைவில் நீக்கப் போகிறது என தெரிந்தும், இருக்கும் வரை கல்லாபெட்டியை நிரப்புவோம் என குறியாய் உள்ளான் ஒத்தைக்காலன்.

ஞானசூனியம்: பெரியகுளம் பெரியவர், சிசிடிவி, ராஜூ பாய் ரகசிய கண்காணிப்பு என எத்தனை கண்காணிப்பு இருந்தும், கல்லா பெட்டியை மட்டும் காலை 5 மணிக்கே தூக்கி விடுகிறான் ஒத்தைக்காலன்.

நிம்ப், இம்ப், ஸ்கிப் என அலுவலகத்தில் ஒத்தைக்காலில் சுத்தி சுத்தி இவன் போடும் ஆட்டத்தையும், டிவி செய்தியை மட்டும் பார்த்துவிட்டு, எதுவும் தெரியாத இந்த அரைவேக்காடு, இந்த ஞானசூனியம், அரசியலை கரைத்து குடித்த மாமேதை போல பேசும் பேச்சை பேய் பார்த்து சிரிக்கலாம். ஏனெனில் கல்லா பெட்டியில் பாதி பங்கு பேய்யுக்கும் செல்வதால், இவனுக்கு பேய்யும் உடந்தை. 

பேனா அடி வாங்கிய பேய்: மேலதிகாரி பேய் ஏற்கெனவே அலுவலகத்தில் ஒருவரிடம் பேனா எறி வாங்கியவர். இதை அலுவலகம் முழுவதும் பரப்பியதும் ஒத்தைக்காலன் கோவி.யே. ஒத்தை காலனிடம் பேய் எதனால் எறி வாங்கப் போகிறதோ, தெரியவில்லை... அவன் பணம் கேட்ட ஆடியோ, செயலிக்கு எதிராக வழக்குத் தொடுக்கும்படி ஒத்தைக்காலன் சக ஊழியரை தூண்டி விட்ட ஆடியோக்களை ஏற்கெனவே ராஜூ பாயிடம் பெரியகுளம் நபர் கொடுத்து விட்டார் எனத் தகவல்.

அடுத்தடுத்து பலர் விலகல்: செயலியில் வேலை பார்த்த முன்னாள் ஊழியர்கள் பலர், வெளியே வந்தபிறகு, பேய் செய்த சித்து விளையாட்டால், தற்போது வேலை இல்லாமல் பிச்சை எடுக்கும் நிலைக்கு சென்று விட்டனர். இதை உணர்நத ஊழியர்கள் பலர், இனி இங்கு வேலை செய்தால், வெளியே வேலை கிடைக்காது என முடிவு செய்து வேலையை விட்டு விட்டனர்.

இதனால் பிழை திருத்தும் ஊழியர்கள், செய்தி எழுதுவதற்கு மாற்றப்பட்டுள்ளனர். ராஜூ பாய் கட்டுப்பாட்டில் தமிழ் செயலி இருந்திருந்தால், இது நடந்திருக்குமா, பேய்தான் இதற்கு காரணம் என பலர் விமர்சிக்கின்றனர். 

தேர்தல் நேரத்தில் கல்லா பெட்டியை நிரப்புவதை விட்டுவிட்டு, செய்தியில் கவனம் செலுத்தினால் செயலி எங்கோ போயிருக்கும். தற்போது செயலி மீதான நம்பகத்தன்மை போய்விட்டது.

பொய் செய்தி செயலி என மக்கள் சிரியாய் சிரிக்கின்றனர். பிரபல நடிகர் காலமானார் என ஆப்பிரிக்கா நடிகரின் செய்தியும், பிரபல நடிகை மரணம் என வெள்ளைக்கார கிழவியின் செய்தியும் வருவது செயலியையே சிரிக்க வைத்து விட்டது.

முட்டைக்கும், பிரியாணிக்கும் போட்டி: அலுவலகத்தில் போடும் முட்டைக்கும், பிரியாணிக்கும் ஒத்தைக்காலன் நாக்கை தொங்க போட்டுக் கொண்டு 2வது மாடியிலிருந்து 4வது மாடிக்கு படிகளில் போட்டி போட்டு ஓடுவது, அவன் கூட்டாளி பேய்-க்கு வேண்டுமானால் ரசனையாகவும், கொண்டாட்டமாகவும் இருக்கலாம்.

ஆனால் இவர்கள் 2 பேரால் பாதிக்கப்பட்ட மற்றவர்களுக்கு...

2 பேருக்கு மட்டும் இன்க்ரீமென்ட்: பேய்-யிக்கு நெருக்கமான சங்கி சொறிக்கும், ஒத்தை காலனுக்கும் அண்மையில் ரகசியமாக 2 முறை பேய் பரிந்துரையில் தலா 10 ஆயிரம் ரூபாய் இன்க்ரீமென்ட் போட்டதாகவும், யாரை 2 பேரும் (அம்பத்தூர் பெரியவரையா இல்லை கியாஸ் மன்னன் பெரியகுளம் பெரியவரையா)பேய்யிடம் போட்டு கொடுத்தனரோ தெரியவில்லை என சக ஊழியர்கள் புலம்புகின்றனர். 

பிழைத் திருத்தும் பிரிவில் 2 பேர், மாவட்ட செய்திப் பிரிவில் 15 பேர், இந்திய செய்திப் பிரிவில் 4 பேர் என ஒத்தைக்காலனின் சிபாரிசில் வேலையில் சேர்ந்தோர் பலர். அனைவருக்கும் தலைவன் ஒத்தைக்காலனே. ராஜூ பாய் தலைவர் இல்லை. ஒத்தைக்காலனையும், அவனது படைப் பிரிவையும் என்ன செய்ய போகிறது செயலி நிர்வாகம்.?

https://punnagaiseithi.com/news-app-dismiss-staffs-from-jobs-suddenly