திடீரென பணிநீக்கம் செய்த செயலி! ஊழியர்கள் அதிர்ச்சி! போட்டு கொடுக்கும் சதிகாரன்!

திடீரென பணிநீக்கம் செய்த செயலி! ஊழியர்கள் அதிர்ச்சி! போட்டு கொடுக்கும் சதிகாரன்!

தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பிரபல செயலியில் சுமார் 70 தமிழர்கள் பணிபுரிகின்றனர். அவர்களில், நெல்லை, தூத்துக்குடி, மதுரை, கோவையைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோரை அந்த செயலி நிர்வாகம் திடீரென 2 நாள்களுக்கு முன்பு பணிநீக்கம் செய்து விட்டதாக சொல்லப்படுகிறது. 

மேலும், பிற மொழி செய்திப் பிரிவுகளில் பணிபுரியும் ஊழியர்கள் சுமார் 100 பேரையும் வேலையை விட்டு நீக்கி விட்டதாகக் கூறப்படுகிறது.

பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் அனைவருக்கும் 2 மாத காலம் நோட்டீஸ் பீரியட் அவகாசம் அளித்துள்ளது. அந்த செயலியின் வேலையை நம்பி, சென்னையில் இருந்து ஹைதராபாத் சென்ற ஏராளமான ஊழியர்கள், தற்போது அதிர்ச்சியில் உள்ளனர்.

செய்திக்கு பணம் வாங்கும் நபர்: அந்த செயலியில் ஓராண்டுக்கு முன்பு வேலையில் சேர்ந்து, உடன் பணிபுரிந்த மற்றவர்களை போட்டுக் கொடுத்து, மேலதிகாரிக்கு நெருக்கமான  கிருஷ்ணகிரியை சேர்ந்த நபர், ஊழியர்கள் பலருக்கு குறிப்பிட்ட சில கட்சிகளின் செய்தி போடும்படி, மிகவும் நெருக்கடி அளித்ததாகவும், வாய்க்கு வந்தபடி வசைபாடியதாகவும், மிரட்டியதாகவும், சக ஊழியர்களிடையே கோல்மூட்டி விட்டு சண்டையிட வைத்ததாகவும் சொல்லப்படுகிறது.

அரசியல் கட்சிகளின் செய்தியை பிரசுரித்து விட்டு, அதற்கு ஜிபே மூலம், பணம் வாங்கி வரும் அந்த நபர், தங்களுக்கு ஒத்துழைக்காதோரை வேலை நீக்கம் செய்யும்படி மேலதிகாரியிடம் போட்டு கொடுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

ஏற்கெனவே முன்பு வேலை செய்த தனியார் செய்தி தொலைக்காட்சி, 2 இணையதளங்கள் உள்ளிட்ட 3 நிறுவனங்களுக்கு துரோகம் செய்த கிருஷ்ணகிரி நபர், தற்போது வேலை செய்யும் செய்தி செயலிக்கும் துரோகம் செய்து பணம் சம்பாதித்து வருவதாகவும், அவர் மீது விசாரணை நடத்தி, ஜிபே மூலம் அரசியல் கட்சிகளிடம் வாங்கும் பணத்தை மீட்குமா, அந்த செயலி நிர்வாகம்? எனவும் கேட்கப்படுகிறது.

அவர் மீது நடவடிக்கை எடுத்தால், அந்த அலுவலகத்தில் அவர் வேலையில் சேர்த்து விட்ட சுமார் 20 பேர் வேலையை விட்டு விலகி விடுவர் என்றும், இதை எப்படி அந்த செயலி நிர்வாகம் தாக்குப்பிடிக்கும் எனவும் பலரும் கேட்கின்றனர்.

செருப்படி வாங்கியும் திருந்தவில்லை! : முந்தைய அலுவலகத்தில் பாேட்டுக் கொடுத்து பெண் ஊழியரிடம் செருப்படி வாங்கியதாகவும், ஆனாலும் போட்டு கொடுக்கும் வெறி மட்டும் அந்த நபருக்கு இன்னும் தணியவில்லை, பண வெறிபிடித்த அவர் திருந்தவில்லை எனவும் ஒரு கதை கூறப்படுகிறது.