பிரீமியர் லீக் 2026: அர்செனலை வீழ்த்தி மான்செஸ்டர் யுனைடெட் த்ரில் வெற்றி

பிரீமியர் லீக் 2026: அர்செனலை வீழ்த்தி மான்செஸ்டர் யுனைடெட் த்ரில் வெற்றி

அர்செனல் எஃப்.சி. அணிக்கு எதிரான லீக் போட்டியில் மான்செஸ்டர் யுனைடெட் அணி 3-2 என்ற கோல்கள் கணக்கில் த்ரில் வெற்றியை பதிவு செய்து அசத்தியது.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் பிரீமியர் லீக் கால்பந்து தொடரின் நடப்பு சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் அர்செனல் எஃப்.சி அணியை எதிர்த்து மான்செஸ்டர் யுனைடெட் அணி பலப்பரீட்சை நடத்தியது. லண்டனில் உள்ள எமிரேட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் தொடக்கம் முதலே இரு அணி வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இதில் ஆட்டத்தின் 29ஆவது நிமிடத்தில் அர்செனல் அணியின் லிசாண்ட்ரோ மார்டினெஸ் கோலடித்து அசத்தினார். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமான செயல்பட்ட மான்செஸ்டர் அணிக்கு பிரையன் எம்பியூமோ ஆட்டத்தின் 37ஆவது நிமிடத்தில் கோலடித்தார். இதன் மூலம் முதல் பாதி ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோலை பதிவு செய்து போட்டியை சமநிலையில் வைத்திருந்தனர்.

இறுதியில் ஆட்டத்தின் 87ஆவது நிமிடத்தில் மான்செஸ்டர் அணியின் மத்தேயுஸ் குன்ஹா கோலடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். மறுபக்கம் இறுதிவரை போராடிய அர்செனல் அணியால் மேற்கொண்டு கோல்களை பதிவு செய்ய முடியாவில்லை. இதன் மூலம் மான்செஸ்டர் யுனைடெட் அணி 3-2 என்ற கோல்கள் கணக்கில் அர்செனல் எஃப்.சி. அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியை பதிவு செய்து அசத்தியது.

இந்த வெற்றியின் மூலம் மான்செஸ்டர் யுனைடெட் அணியானது நடப்பு பிரீமியர் லீக் தொடரில் தங்களுடைய 10ஆவது வெற்றியை பதிவு செய்ததுடன், 38 புள்ளிகளை பெற்று பட்டியலில் நான்காம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. அதேசமயம் அர்செனல் எஃப்.சி. அணி இந்த போட்டியில் தோல்வியை தழுவி இருந்தாலும் 50 புள்ளிகளுடன் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது.