இலங்கை செல்கிறது பாகிஸ்தான் அணி.. 3 டி20 போட்டிகளில் மோதல்
3 டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கைக்கு அடுத்த ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சுற்றுப்பயணமாக செல்லவுள்ளது.
ஜனவரி 7ம் தேதி முதல் டி20 போட்டி நடக்கிறது. ஜனவரி 9-ம் தேதி 2வது டி20 போட்டியும், ஜனவரி 11-ம் தேதி 3வது டி20 போட்டியும் நடத்தப்படவுள்ளது.
அண்மையில்தான் இலங்கை அணி, பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியது. இதையடுத்து இலங்கைக்கு அடுத்த ஆண்டு பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சுற்றுப்பயணமாக செல்லவுள்ளது.
இதைத் தொடர்ந்து, ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 3 டி20 போட்டிகளில் பாகிஸ்தான் அணி விளையாடுகிறது.