சிகரெட், பான் மசாலா வரி இன்று முதல் அமல்

சிகரெட், பான் மசாலா வரி இன்று முதல் அமல்

சிகரெட், பான் மசாலா மீது விதிக்​கப்​பட்ட கூடு​தல் கலால், செஸ் வரி இன்று முதல் அமலுக்கு வரு​கிறது.

பழைய ஜிஎஸ்டி வரி விதிப்​பில் சிகரெட், பான் மசாலா, பீடிக்கு 28% வரி விதிக்​கப்​பட்​டது. கடந்த ஆண்டு செப்​டம்​பரில் நடை​பெற்ற 56-வது ஜிஎஸ்டி கவுன்​சில் கூட்​டத்​தில் சிகரெட், பான் மசாலா​வுக்கு 40% ஜிஎஸ்டி வரி விதிக்​கப்​பட்​டது. பீடிக்​கான ஜிஎஸ்டி 18 சதவீத​மாகக் குறைக்​கப்​பட்​டது.

இதைத் தொடர்ந்து சிகரெட், பான் மசாலா உள்​ளிட்ட புகை​யிலை பொருட்​கள் மீது கூடு​தல் வரி விதிக்க ஏது​வாக மத்​திய கலால் திருத்த சட்ட மசோதா 2025 நாடாளு​மன்​றத்​தில் அண்​மையில் நிறைவேற்​றப்​பட்​டது. இதே​போல புகை​யிலை பொருட்​கள் மீது புதிய செஸ் வரி விதிக்க ஏது​வாக, சுகா​தார மற்​றும் தேசிய பாதுகாப்பு செஸ் மசோதா 2025 நாடாளு​மன்​றத்​தில் நிறைவேற்​றப்​பட்​டது. இரு மசோ​தாக்​களுக்​கும் குடியரசுத் தலை​வர் ஒப்​புதல் வழங்​கி​னார்.

இதைத் தொடர்ந்​து, புகை​யிலை, வாசனை புகை​யிலை, குட்கா பேக்​கிங் இயந்​திரங்​கள் விதி​கள் 2026 என்ற அரசாணையை மத்திய நிதி​யமைச்​சகம் கடந்த டிசம்​பரில் வெளி​யிட்டது. இந்த புதிய விதிகள் மற்​றும் சிகரெட், பான் மசாலா தொடர்​பான வரி விகிதங்கள் இன்​று​ முதல் அமலுக்கு வரு​கின்றன. இதனால் சிகரெட், பான் மசாலா உள்​ளிட்ட புகை​யிலை பொருட்​கள் மீதான விலை உயர உள்​ளது.

இது தொடர்​பாக தொழில்​துறை வட்​டாரங்​கள் கூறிய​தாவது: சிகரெட், பான் மசாலா உள்​ளிட்ட புகை​யிலை பொருட்​களை பேக்​கிங் செய்​யும் இடங்​களில் கண்​டிப்​பாக சிசிடிவி கேம​ராக்​களை பொருத்த மத்​திய அரசு உத்​தர​விட்​டுள்​ளது. இதன்​மூலம் ஒரு ஆலை​யில் எவ்​வளவு சிகரெட், பான் மசாலா தயாரிக்​கப்​படு​கின்றன என்​பதை மிகத் துல்​லிய​மாக அறிய முடி​யும்.

சிகரெட், பான் மசாலா மீது விதிக்​கப்​பட்ட கூடு​தல் கலால், செஸ் வரி காரண​மாக அவற்​றின் அளவுக்கு ஏற்ப வரி விதிக்​கப்பட உள்​ளது. சாதாரண சிகரெட்​டுக்கு (65 எம்​எம்) ரூ.2.05, நடுத்தர சிகரெட்​டுக்கு (70எம்​எம்) ரூ.4, பிரிமி​யம் சிகரெட்​டுக்கு (75 எம்​எம்) ரூ.5.4 கூடு​தல் வரி விதிக்​கப்​படும். இதனால் சிகரெட்​டு​களின் விலை உயரும். இவ்​வாறு அந்த வட்​டாரங்​கள் தெரிவித்​தன.