2வது டி20 கிரிக்கெட்: இந்தியா முதலில் பந்துவீச்சு

2வது டி20 கிரிக்கெட்: இந்தியா முதலில் பந்துவீச்சு

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 2வது டி20 கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

2 நாடுகள் இடையே 5 டி20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறுகிறது. இதில் கட்டாக்கில் நடந்த முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 100 ரன்களுக்கும் மேல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தெ.ஆப்பிரிக்க அணி படுதோல்வியை சந்தித்தது.

இதையடுத்து, நியு சண்டிகாரில் இரு அணிகளுக்கு இடையேயான 2வது டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது. இதில் டாஸ் வென்ற இந்திய கிரிக்கெட் அணி, முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

இந்திய அணி வீரர்கள் வருமாறு:

சூரியகுமார் யாதவ், அபிசேக் சர்மா, சுப்மன் கில், திலக் வர்மா, ஜிதேஸ் வர்மா, ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, அக்சார் படேல், ஏ.சிங், வருண் சக்கரவர்த்தி, பும்ரா