5வது டி20 போட்டி: தெ.ஆப்பிரிக்காவுக்கு 232 ரன்கள் இலக்கு
5வது மற்றும் கடைசி டி20 போட்டியில், தெ.ஆப்பிரிக்க அணிக்கு இந்திய அணி 232 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
அகமதாபாத்தில் இன்று இந்தியா, தெ.ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 5வது மற்றும் கடைசி டி20 போட்டி நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற தெ.ஆப்பிரிக்க அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதைத் தொடர்ந்து, இந்திய அணி களமிறங்கி முதலில் பேட்டிங் செய்தது. துவக்க ஆட்டக்காரர்கள் அபிசேக் சர்மா, சஞ்சு சாம்சன் ஆகியோர் சிறப்பான துவக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தனர். 2 பேரும் தெ.ஆப்பிரிக்க பந்துவீச்சை நொறுக்கினர்.

சிறப்பாக விளையாடிய அபிசேக் சர்மா 34, சஞ்சு சாம்சன் 37 ரன்களில் அவுட்டாகினர். அதன்பிறகு திலக் வர்மா களமிறங்கினார். அவர் வழக்கம் போல சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் ஸ்கோர் வேகமாக அதிகரித்தது. மறுமுனையில் சூரியகுமார் 5 ரன்னில் ஆட்டமிழந்த போதிலும், பிறகு வந்த ஹர்திக் பாண்டியா பட்டாசாய் வெடித்தார்.

16 பந்துகளில் அரைசதம் விளாசிய ஹர்திக் பாண்டியா, 2வது அதிவேக அரைசதம் விளாசிய இந்திய வீரர் என்ற சாதனையை புரிந்தார். அவரும் 63 ரன்களில் அவுட்டானார். இதேபோல் அரைசதமடித்து விளையாடிக் கொண்டிருந்த திலக் வர்மா 73 ரன்களில் ரன் அவுட் ஆனார்.
முடிவில் 20 ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 231 ரன்களை எடுத்தது. சிவம் துபே 10 ரன்களுடன் அவுட்டாகாமல் களத்தில் இருந்தார்.