200 மில்லியன் வியூஸ்களை கடந்து சாதனை.. 2 ஆண்டுகளாக யூடியூப்பில் டிரெண்டிங் பாடல்.. எது தெரியுமா?

200 மில்லியன் வியூஸ்களை கடந்து சாதனை.. 2 ஆண்டுகளாக யூடியூப்பில் டிரெண்டிங் பாடல்.. எது தெரியுமா?
சில பாடல்கள் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுபவை. அந்த வகையில் ரஜினிக்கான ‘மாஸ்’ பாடல்களுக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் உண்டு. குறிப்பாக இந்த மாஸ் பாடல்களை திரையரங்குகளில் படத்துடன் சேர்த்து கேட்கும்போது ஏற்படும் உணர்வு சொல்லில் அடங்காது.
அந்த வகையில் ரஜினி நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ படத்தில் இடம்பெற்ற ‘ஹுக்கும்’ பாடல் 200 மில்லியன் வியூஸ்களை பெற்றுள்ளது. அதாவது 20 கோடி வியூஸ்களை கடந்து சாதனை படைத்துள்ளது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் கடந்த 2023-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் ‘ஜெயிலர்’. இந்தப் படத்தில் ரம்யா கிருஷ்ணன், மிர்ணா மேனன், விநாயகன், சிவராஜ்குமார் மோகன்லால், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
படத்துக்கு அனிருத் இசையமைத்தார். படத்தில் ‘ஹுக்கும் - தலைவர் அலப்பரை’ பாடல் கடந்த 2023-ம் ஆண்டு ஜூலை 17-ம் தேதி வெளியானது. இந்தப் பாடலின் வரிகளை சூப்பர் சுப்பு எழுதியிருந்தார். அனிருத் பாடியிருந்தார். இசையில் தெறிக்கும் இந்தப் பாடல் 2 ஆண்டுகளாக யூடியூப்பில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.
தற்போது இந்தப் பாடல் 20 கோடி வியூஸ்களை கடந்துள்ளது. இதனை சன்பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அடுத்து ரஜினிகாந்த் ‘ஜெயிலர் 2’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தையும் நெல்சன் தயாரிக்கிறார். படம் ஜூன் மாதம் வெளியாகும் என கூறப்படுகிறது.