இன்று 3-வது டி20 போட்டி: இந்தியா - ஆஸி. மோதல்

இன்று 3-வது டி20 போட்டி: இந்தியா - ஆஸி. மோதல்

இந்தியா, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 3-வது சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டி இன்று ஹோபர்ட் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் போட்டி, டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதலாவது டி20 ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. 2-வது டி20 ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் 3-வது டி20 ஆட்டம் ஹோபர்ட் மைதானத்தில் இன்று பிற்பகல் 1.45 மணிக்கு தொடங்கவுள்ளது.

இந்த ஆட்டம் இந்திய அணிக்கு முக்கியமான ஆட்டமாக அமைந்துள்ளதால் இதில் வெற்றி பெறுவதற்கு வீரர்கள் முழு திறனையும் வெளிப்படுத்துவார்கள் என்று நம்பலாம். ஒருவேளை இந்தப் போட்டியில் இந்திய அணி தோல்வியுற நேரிட்டால் தொடரை இழப்பதற்கான வாய்ப்பு ஏற்படும். எனவே, போட்டியில் வெற்றி பெற்று தொடரை உயிர்ப்புடன் வைத்திருக்க இந்திய அணி போராடும்.