டி20 கிரிக்கெட்: ஹர்திக் பாண்டியா புதிய சாதனை

டி20 கிரிக்கெட்: ஹர்திக் பாண்டியா புதிய சாதனை

தெ.ஆப்பிரிக்காவுக்கு எதிரான 5வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வீரர் ஹர்திக் பாண்டியா புதிய சாதனை படைத்தார்.

5வது டி20 போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இக்கட்டான நேரத்தில் திலக் வர்மாவுடன் ஹர்திக் பாண்டியா ஜோடி சேர்ந்தார். 

களமிறங்கிய முதல் பந்து முதல் ஹர்திக் பாண்டியா பட்டாசாய் வெடித்தார். பவுண்டரிகள், சிக்சர்கள் என தெ.ஆப்பிரிக்க வீரர்களின் பந்துவீச்சை நொறுக்கித் தள்ளினார்.

மொத்தம் 16 பந்துகளை எதிர்கொண்டு, 54 ரன்களை ஹர்திக் பாண்டியா விளாசினார். இதில் 4 பவுண்டரிகள், 5 சிக்சர்கள் ஆகியவையும் அடங்கும்.

இது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர் ஒருவர் விளாசும் 2வது அதிவேக அரைசதம் ஆகும். இதற்கு முன்பு, யுவராஜ் சிங் 12 பந்துகளில் அரைசதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.