“எனது எதிர்காலத்தை பிசிசிஐ முடிவு செய்யும்” - வரலாற்று தோல்விக்குப் பின் கவுதம் கம்பீர் கூறியது என்ன?
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான குவாஹாட்டி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 408 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணியின் மோசமான தோல்வியாக இது அமைந்தது.
அதேவேளையில் தென் ஆப்பிரிக்க அணி 25 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை 2-0 என முழுமையாக கைப்பற்றி கோப்பயை வென்றது. கவுதம் கம்பீர் பயிற்சியில் இந்திய கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் விளையாடிய 7 டெஸ்ட் போட்டிகளில் 5-ல் தோல்வி கண்டுள்ளது.
சாம்பியன்ஸ் டிராபியையும், ஆசியக் கோப்பையையும் வென்றுள்ளோம். குற்றம் சுமத்துதல் எல்லோர் மீதும் இருக்கிறது. அது என்னில் இருந்து தொடங்கட்டும். நாங்கள் சிறப்பாக விளையாட வேண்டும். 95 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்த நிலையில் இருந்து 122 ரன்களுக்குள் 7 விக்கெட்கள் சரிவு என்பதை ஏற்க முடியவில்லை. இதற்காக ஒரு வீரரையோ அல்லது ஒரு ஷாட்டையோ குறை கூற முடியாது. பழி எல்லோரையுமே சேரும். தனிப்பட்ட வீரரை ஒருபோதும் நான் குற்றம் கூறியது கிடையாது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றிபெற திறமையான, துணிச்சலான வீரர்கள் தேவையில்லை. குறைவான திறன்கள் கொண்ட, ஆட்டத்தின் எந்த சூழ்நிலையிலும் வலுவான மனநிலையுடன் விளையாடக்கூடிய வீரர்களே தேவையாக உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.