யூ டியுப்பில் ஆஸ்கர் விருது விழா... 2029 முதல் ஒளிபரப்பு

யூ டியுப்பில் ஆஸ்கர் விருது விழா... 2029 முதல் ஒளிபரப்பு

2029ம் ஆண்டு முதல் ஆஸ்கர் விருது வழங்கும் விழா நிகழ்ச்சி, யூ டியூப் தளத்தில் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது.

உலகின் மிகப்பெரிய திரைப்பட விருது விழா வழங்கும் நிகழ்ச்சியாக ஆஸ்கர் விருது விழா கருதப்படுகிறது. இந்நிகழ்ச்சியை 1961ம் ஆண்டு முதல் சுமார் 50 ஆண்டுக்கும் மேல் ஏபிசி தளமே வழங்கி வந்தது. 

இந்நிலையில், யூ டியுப் தளத்தில் ஆஸ்கர் நிகழ்ச்சியை 2029ம் ஆண்டு முதல் ஒளிபரப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. விருது நிகழ்ச்சி, ரெட் கார்பட் வரவேற்பு உள்ளிட்ட அனைத்தும் யூ டியுப்பில் 2029ம் ஆண்டு முதல் 2033-ம் ஆண்டு வரை ஒளிபரப்பாகும். 

உலகில் கோடிகணக்கானோர் யூ டியுப் தளத்தை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், அந்தத் தளத்தில் ஆஸ்கர் விருது வழங்கும் விழா நிகழ்ச்சி 2029ம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகவுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.