கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவில்லை... ஷாகீப் அல் ஹசன் திடீர் பல்டி
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதாக அறிவித்த வங்கதேச வீரர் ஷாகீப் அல் ஹசன் திடீரென தனது கருத்தில் பல்டி அடித்துள்ளார்.
கடந்தாண்டு டெஸ்ட், டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தாம் ஓய்வு பெறுவதாக ஹசன் அறிவித்து இருந்தார். இதையடுத்து அவர் கிரிக்கெட் விளையாடாமல் இருந்து வருகிறார்.
வங்கதேசத்தை முன்பு ஆட்சி செய்த அவாமி லீக் கட்சியின் எம்பி என்பதால், தற்போதைய இடைக்கால அரசுக்கு பயந்து நாட்டுக்கு திரும்பாமல் உள்ளார். இந்நிலையில், தாம் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறவில்லை என்றும், 3 வடிவ கிரிக்கெட்டிலும் தாம் விளையாட விரும்புவதாகவும் கூறினார்.
ஒரே நேரத்தில் ஒருநாள், டி20, டெஸ்ட் போட்டிகளில் இருந்து தாம் ஓய்வு பெற விரும்புவதாகவும், இதற்காக காத்து இருப்பதாகவும் குறிப்பிட்டார்.