கர்நாடக கிரிக்கெட் சங்கத் தலைவரானார் வெங்கடேஷ் பிரசாத்

கர்நாடக கிரிக்கெட் சங்கத் தலைவரானார் வெங்கடேஷ் பிரசாத்

இந்திய அணியின் முன்னாள் வேகபந்து வீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத், கர்நாடக கிரிக்கெட் சங்கத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கிரிக்கெட் சங்கத் தலைவருக்கு நடந்த போட்டியில், வெங்கடேஷ் பிரசாத்தும் சாந்த குமாரும் போட்டியிட்டனர். இதில் 749-558 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் பிரசாத் வெற்றி பெற்றார்.

இதேபோல் துணைத் தலைவராக முன்னாள் இந்திய அணி வீரர் சுஜித் சோமசுந்தர் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார். கர்நாடக கிரிக்கெட் சங்கத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிரசாத், பெங்களூரு சின்னசாமி மைதானத்தின் பெருமையை மீட்டெடுக்க போவதாக தெரிவித்தார்.

கூட்ட நெரிசலில் 11 பேர் பலியானது முதல் அந்த மைதானத்தில் கிரிக்கெட் போட்டிகள் எதுவும் நடத்தப்படாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.