ஆஸ்திரேலியாவில் துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழப்பு; ஒருவர் படுகாயம்

ஆஸ்திரேலியாவில் துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழப்பு; ஒருவர் படுகாயம்

ஆஸ்​திரேலி​யா​வின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்​தில் நேற்று மர்ம நபர்​கள் நடத்​திய துப்பாக்கிச்சூட்​டில் இரண்டு பெண்​கள் உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர். ஒரு​வர் படு​காயமடைந்​தார்.

இதுகுறித்து நியூ சவுத் வேல்ஸ் போலீ​ஸார் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில் கூறப்​பட்​டுள்​ள​தாவது: லேக் கார்​ஜெல்​லிகோ​வில் சுமார் 1,500 பேர் வசித்து வரு​கின்​றனர். இந்த நகரில் உள்ள ஒரு வீட்​டில் துப்​பாக்​கிச் சூடு நடத்தப்பட்டதாக போலீ​ஸாருக்கு தகவல் கிடைத்​தது.

சம்பவ இடத்தை மீட்​புப் படை​யினர் வந்​தடைந்​த​போது அங்கு இரண்டு பெண்​கள் மற்​றும் ஒரு ஆண் என மொத்தம் மூன்று பேர் சடல​மாக கிடந்​தனர். மேலும், படுகாயமடைந்து உயிருக்கு போ​ராடிக்​கொண்​டிருந்த ஒருவர் சிகிச்​சைக்​காக மருத்​து​வ​மனை​யில் அனுமதிக்கப்பட்​டார். அவரது நிலைமை கவலைக்கிடமாக இருப்​ப​தாக மருத்​து​வர்​கள் தெரிவித்துள்​ளனர்.

துப்​பாக்​கிச் சூடு நடத்​திய நபர்​கள் அங்​கிருந்து தப்​பிச் சென்​று​ விட்​ட​தாக கூறப்​படு​கிறது. அவர்​களைப் பிடிக்​கும் பணி தீவிர​மாக நடை​பெற்று வரு​கிறது.இவ்​வாறு அந்த அறிக்​கை​யில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கை​யாக, அப்​பகுதி மக்​கள் வீடு​களுக்​குள்​ளேயே இருக்​கு​ மாறும், அவசி​யமின்றி வெளியே வர வேண்​டாம் என்​றும் குறுஞ்​செய்​தி​கள் மூலம் போலீ​ஸார் அறி​வுறுத்​தி​யுள்​ளனர்.

கடந்த டிசம்​பர் 14-ம் தேதி சிட்​னி​யில் ஹனுக்கா பண்டிகையின்​போது மர்ம நபர்​கள் நடத்​திய துப்​பாக்​கிச் சூட்​டில் 15 பேர் உயி​ரிழந்​தனர். அந்த துயர சம்​பவத்​தின் நினை​வாக நேற்று ஆஸ்​திரேலியா முழு​வதும் தேசிய துக்க தினம் அனுசரிக்​கப்​பட்​டது. இந்​தச் சூழலில் மீண்​டும் ஒரு துப்​பாக்​கிச் சூடு சம்​பவம் நிகழ்ந்​துள்​ளது ஆஸ்​திரேலிய மக்​களிடையே பெரும் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி​யுள்​ளது.