குலுக்கல் முறையில் மும்பை மேயர் பதவி மகளிருக்கு ஒதுக்கீடு

குலுக்கல் முறையில் மும்பை மேயர் பதவி மகளிருக்கு ஒதுக்கீடு

 மும்பை மேயர் பதவி, பொதுப் பிரிவை சேர்ந்த மகளிருக்கு ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டுள்ளது.

மகா​ராஷ்டி​ரா​வில் 29 மாநக​ராட்​சிகளுக்கு கடந்த 15ம் தேதி தேர்​தல் நடை​பெற்​றது. இதில் 17 மாநக​ராட்​சிகளை பாஜக தனித்து கைப்​பற்​றியது. மும்பை உட்பட மேலும் 8 மாநக​ராட்​சிகளை பாஜக, சிவசேனா (ஷிண்​டே) அடங்​கிய மகா​யுதி கூட்​டணி கைப்பற்​றியது. கடந்த 1998-ம் ஆண்டு முதல் மாநக​ராட்சி தேர்​தல் முடிவு​கள் வெளி​யான பிறகு, ஒவ்​வொரு மாநக​ராட்​சி​யிலும் தனித்​தனி​யாக குலுக்​கல் நடத்​தப்​படும். இதன் மூலம் குறிப்​பிட்ட மாநகராட்​சி​யின் மேயர் பதவி பொதுப் ​பிரிவு, மகளிர், ஓபிசி, எஸ்சி, எஸ்டி சமூகத்​தினரில் ஏதாவது ஒரு பிரி​வினருக்கு ஒதுக்​கீடு செய்யப்​படும்.

இதன்​படி அந்​தந்த மாநக​ராட்​சிகளில் நேற்று குலுக்​கல் நடத்தப்பட்​டது. இதில் மும்பை மேயர் பதவி பொதுப் பிரிவை சேர்ந்த மகளிருக்கு ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டது. மும்பை மாநகராட்சி​யில் மொத்​தம் 227 வார்​டு​கள் உள்​ளன. இதில் பாஜக 89, அதன் கூட்​டணி கட்​சி​யான சிவசேனா (ஏக்​நாத் ஷிண்​டே) 29 தொகு​தி​களில் வெற்றி பெற்​றுள்​ளன.

மும்பை மாநக​ராட்​சி​யில் பெரும்​பான்​மையை நிரூபிக்க 114 கவுன்​சிலர்​களின் ஆதரவு தேவை என்ற நிலை​யில் பாஜக கூட்டணிக்கு 118 கவுன்​சிலர்​கள் உள்​ளனர். வரும் 28-ம் தேதி மும்பை மேயர் தேர்​தல் நடை​பெற உள்​ளது. தற்​போதைய சூழலில் பாஜக பெண் கவுன்​சிலர்​கள் யோகிதா சுனில் கோலி, தேஜஸ்வி அபிஷேக் கோசல்​கர் ஆகியோர் முன்​வரிசை​யில் உள்​ளனர்.

உத்​தவ் அணி எதிர்ப்பு: மும்பை மாநக​ராட்சி தேர்​தலில் உத்​தவ் தாக்​கரே தலை​மையி​லான சிவசேனா 65 வார்​டு​களில் வெற்றி பெற்​றுள்​ளது. மும்​பை​யில் நடந்த குலுக்​கலில் முறை​கேடு​கள் நடை​பெற்​றிருப்​ப​தாக​வும், குலுக்​கலின்​போது ஓபிசி மற்​றும் எஸ்டி பிரிவு சேர்க்​கப்​பட​வில்லை என்​றும் உத்​தவ் அணியை சேர்ந்த முன்​னாள் மேயர் கிஷோரி பட்​னாகர் குற்​றம் சாட்​டி​னார்.

தற்​போது எஸ்டி பிரிவை சேர்ந்த பெண் கவுன்​சிலர்​கள் உத்​தவ் தாக்​கரே அணி​யில் மட்​டுமே உள்​ளனர். ஒரு​வேளை குலுக்கலின்போது மும்பை மேயர் பதவி எஸ்டி பிரிவு மகளிருக்கு ஒதுக்கப்பட்டு இருந்​தால் உத்​தவ் அணிக்கு மேயர் பதவி கிடைத்திருக்​கக்​கூடும் என்று அரசி​யல் நோக்​கர்​கள் தெரிவித்துள்ளனர்.

16 பெண் மேயர்​கள்: மும்​பையை தவிர்த்து நவி​மும்பை, புனே உள்ளிட்ட 16 மாநக​ராட்​சிகளின் மேயர் பதவி​கள் மகளிருக்கு ஒதுக்​கீடு செய்​யப்​பட்டு உள்​ளன. இதில் பெரும்​பாலான மாநகராட்​சிகளில் பாஜக பெண் மேயர்​கள் பதவி​யேற்க உள்ளனர். தற்​போது நடத்​தப்​பட்டு உள்ள குலுக்​கல் நடைமுறைக்குப் பிறகு 29 மாநக​ராட்​சிகளின் மேயர் பதவிகளுக்கு வரும் 28-ம் தேதி தேர்​தல் நடத்​தப்பட உள்​ளது.