'மங்காத்தா' ரீ-ரிலீஸ் நாளில்... அஜித் ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!

'மங்காத்தா' ரீ-ரிலீஸ் நாளில்... அஜித் ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!

அஜித்தின் மங்காத்தா திரைப்படம் ரீரிலீஸ் ஆகியுள்ள நிலையில் சென்னையில் உள்ள திரையரங்கில் மங்காத்தா படத்தின் இயக்குநர் வெங்கட்பிரபு உள்ளிட்ட படக்குழுவினர் ரசிகர்களுடன் படம் பார்த்தனர்.

அஜித்தின் மங்காத்தா திரைப்படம் ரீரிலீஸ் ஆகியுள்ள நிலையில் அதன் இரண்டாம் பாகத்திற்கு அப்டேட் கொடுத்திருக்கிறார் இயக்குநர் வெங்கட் பிரபு.

அஜித்தின் மங்காத்தா திரைப்படம் ரீரிலீஸ் ஆனதையொட்டி தமிழ்நாடு முழுவதும் ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடினர்.
2011ல் வெளியாகி ஹிட் அடித்த அஜித்தின் மங்காத்தா திரைப்படம் தற்போது ரீரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. கோவை காந்திபுரத்தில் அமைந்துள்ள கற்பகம் சினிமாவில், மங்காத்தா ரீ ரிலீஸ் செய்யப்பட்டதை ஒட்டி ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். பட்டாசு வெடித்தும், கேக் வெட்டியும் உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.
இதேபோல, நெல்லையில் மங்காத்தா ரீரிலீஸ் செய்யப்பட்ட ராம்சினிமாஸ் திரையரங்கில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அஜித்-விஜய் புகைப்படங்களுடன் கூடிய பிரம்மாண்ட கட் அவுட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. இதனிடையே, சென்னையில் உள்ள திரையரங்கில் மங்காத்தா படத்தின் இயக்குநர் வெங்கட்பிரபு உள்ளிட்ட படக்குழுவினர் ரசிகர்களுடன் படம் பார்த்தனர்.
அப்போது திரையரங்கில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்த இயக்குநர் வெங்கட்பிரபு மங்காத்தா படத்தின் இரண்டாம் பாகத்தின் அப்டேட் கொடுத்தார். அதில், "அஜித் சொன்னால் எனக்கு ஓகே. மங்காத்தா படம் அஜித் தான் சொன்னார். அதனால் மங்காத்தா 2 பாகத்தையும் அஜித் தான் சொல்வார்" என்று அஜித் ஓகே சொன்னால் மங்காத்தா படத்தின் இரண்டாம் பாகம் தயாராகும் என்று வெங்கட்பிரபு கூறினார்.
இதற்கிடையே, இன்று மங்காத்தா திரைப்படம் 400க்கும் மேற்பட்ட திரைகளில் பிரம்மாண்டமாக ரீ ரிலீஸாகியுள்ளது. தமிழகத்திலேயே ரீ ரிலீஸில் மங்காத்தா திரைப்படம் தான் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு வாயிலாகவே 1 லட்சம் டிக்கெட்கள் விற்பனையாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், கில்லி, படையப்பா திரைப்படங்கள் ரீ ரிலீஸில் வசூலைக் குவித்தது போல், மங்காத்தா திரைப்படமும் நல்ல வசூலை ஈட்டலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.