திருவாசகத்தின் முதல் பாடல்... ஜி.வி. பிரகாஷ் வெளியிட்டார்!

திருவாசகத்தின் முதல் பாடல்... ஜி.வி. பிரகாஷ் வெளியிட்டார்!

திருவாசகத்தின் முதல் பாடலை ஜி.வி. பிரகாஷ் தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார். தமிழ் ஆன்மிக இலக்கியத்தின் மகத்தான படைப்பு திருவாசகம். திருவாசகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளுக்கு இசையமைத்து, அவற்றை உலகிற்கு கொண்டு சேர்க்கும் முயற்சியில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் ஈடுபட்டுள்ளார்.

இதன் ஒரு பகுதியை, சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற பொங்கல் விழாவில், பிரதமர் மோடி முன்னிலையில் ஜி.வி. பிரகாஷ் இசை நிகழ்ச்சியாக அரங்கேற்றி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார். இந்நிலையில், திருவாசகத்தின் முதல் பாடலை ஜி.வி.பிரகாஷ் தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார். பிரதமர் மோடியின் பாராட்டைப் பெற்ற இந்தப் பாடல், ஆன்மிக இசை ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.