செங்கோட்டையனுடன் அதிருப்தியா? – ஆனந்த் சொன்ன பதில்..

செங்கோட்டையனுடன் அதிருப்தியா? – ஆனந்த் சொன்ன பதில்..

தவெகவில் ஏன் சேர்ந்தோம் என்று செங்கோட்டையன் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படும் நிலையில் தவெகவில் விஜயின் கீழ் அனைவரும் தொண்டர்கள் தான் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் கூறியுள்ளார்.

பல்வேறு மாற்று கட்சிகளை சேர்ந்த 392 பேர் இன்று தவெகவில் இணைந்தனர். சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்வில் ஆனந்த் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த ஆனந்திடம் செங்கோட்டையனிடம் அதிருப்தி உள்ளதா என கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த ஆனந்த், நாங்கள் ஒற்றுமையாகதான் இருக்கிறோம். எங்களுக்குள் சின்ன சின்ன சண்டைகள் கூட இல்லை. செங்கோட்டையனுடன் எந்த மனக் கசப்பும் இல்லை. எல்லோரும் விஜய் தலைமையின் கீழ் தொண்டர்கள் தான் என்றார்.

முன்னதாக தவெகவின் தேர்தல் பிரச்சார குழுவில் செங்கோட்டையனுக்கு 3வது இடம் வழங்கப்பட்டிருப்பதால் அவர் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. மாவட்ட செயலாளர்களுடன் பேச வேண்டும் என்றாலும், தவெக பொதுச்செயலாளர் ஆனந்தின் அனுமதி பெற்றே பேச வேண்டும் என கட்சிக்குள் கட்டுப்பாடு விதிப்பதாகவும், கட்சியில் இருக்கும் தலைமை நிர்வாகிகள் செங்கோட்டையனை பின்னுக்கு தள்ளுவதாகவும் கூறப்படுகிறது.

விஜயை சந்திக்க நினைத்தாலும் அதற்கு அனுமதி கிடைப்பதில்லை என்றும் சொல்லப்படுகிறது. இதனால், தவெகவில் ஏன் இணைந்தோம் என்ற எண்ணத்தில் செங்கோட்டையன் இருப்பதாக தகவல்கள் கசிகின்றன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

© மேலும் இதில் பதிவிடும் தகவல்கள் அனைத்தும் பல இணையதளத்தில் கிடைக்கும் அல்லது சேர்க்கப்பட்டுள்ள விவரங்கள் மட்டுமே, பிழைகள் அல்லது அச்சு பிழைகள் இருக்கலாம். இந்தச் சேவையை நம்பினால் அல்லது இந்த punnagaiseithi.com வழியாகக் கிடைக்கும் எந்த ஒரு கருத்தையும் ஏற்று நீங்கள் முடிவெடுத்தால், உங்களுடைய சொந்த முயற்சியில்தான் அதைச் செய்கிறீர்கள். இந்த தளத்தில் சொல்லப்பட்ட தகவல், தயாரிப்புகள், மற்றும் சேவைகள் சம்பந்தப்பட்ட பிற பிரச்சனைகளை நீங்கள் புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்ளவேண்டும். நீங்கள் சுயமாக எடுக்கும் முடிவிற்கு இந்த வலைத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது.