ஈ​ரான் போராட்ட உயிரிழப்பு 3,117 - அரசு தொலைக்​காட்சி தகவல்

ஈ​ரான் போராட்ட உயிரிழப்பு 3,117 - அரசு தொலைக்​காட்சி தகவல்

ஈரானில் நடை​பெற்ற போராட்​டத்​தில் இது​வரை 3,117 பேர் உயி​ரிழந்​துள்​ள​தாக அரசு தொலைக்​காட்சி முதல் முறை​யாகத் தெரி​வித்​துள்​ளது.

ஈரானில் அரசுக்கு எதிராக கடந்த 28-ம் தேதி தொடங்​கிய போராட்டம் கலவர​மாக மாறியது. குறிப்​பாக ஹிஜாப் அணிவது உட்பட பல கட்​டுப்​பாடு​களை எதிர்த்து ஆயிரக்கணக்​கான பெண்​கள் போராட்​டத்​தில் இறங்கினர். இ​தில் 5,000-க்​கும் மேற்​பட்​டோர் உயி​ரிழந்​துள்​ள​தாக அமெரிக்காவை சேர்ந்த மனித உரிமை அமைப்பு குற்றம் சாட்​டியது. இதை ஈரான் அரசு மறுத்​தது.

இந்​நிலை​யில் போராட்​டத்​தில் இது​வரை 3,117 பேர் உயிரிழந்துள்ளதாக ஈரான் அரசு தொலைக்​காட்சி முதல் முறை​யாக கடந்த புதன்​கிழமை தகவல் வெளி​யிட்​டது.

ஈரானில் தற்​போது போராட்​டம் கட்​டுக்​குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக வெளி​யுறவுத் துறை அமைச்​சகம் தெரிவித்துள்ளது. எனினும், ஆங்​காங்கே போ​ராட்​டங்​கள்​ தொடர்ந்து நடைபெற்றுக் கொண்​டிருக்கின்​றன.