இன்றைய ராசிபலன் @ 23 ஜனவரி 2026
மேஷம்: உறவினர் மத்தியில் மதிப்பு உயரும். பால்ய நண்பர்களை சந்திப்பீர். புதிய சிந்தனைகள் உதிக்கும். வியாபாரத்தில் நிர்வாகத் திறன் அதிகரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்ளவும்.
ரிஷபம்: நீண்ட நாள் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர். பொது அறிவை வளர்த்துக் கொள்வீர். வீட்டுக்கு புதிய பொருட்கள் வந்து சேரும். யோகா, தியானத்தில் மனம் செல்லும். அலுவலகரீதியான பயணங்கள் திருப்தி தரும். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்துவீர்கள்.
மிதுனம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர். சமூகத்தில் அந்தஸ்து உயரும். குடும்பத்தில் நல்லது நடக்கும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். அலுவலகத்தில் தேடிய முக்கிய ஆவணம் தென்படும். வியாபாரத்தில் புதிய யுக்திகளைக் கையாளுவீர்கள்.
கடகம்: சவால்கள், ஏமாற்றங்களை கடந்து வெற்றி அடைவீர். தம்பதிக்குள் விட்டுக் கொடுத்து போவீர்கள். பழைய கடனை பைசல் செய்யும் அளவுக்கு பணவரவு உண்டு. வியாபாரத்தில் பங்குதாரரின் ஆலோசனைகளை அலட்சியப்படுத்தாதீர். அலுவலகத்தில் மதிப்பு உயரும்.
சிம்மம்: திட்டமிட்ட காரியங்களை, குறித்த நேரத்தில் முடிக்க முடியாமல் திணருவீர். சொந்தம் பந்தங்களிடம் விட்டுக் கொடுத்து போவது நல்லது. வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர். அலுவலகத்தில் மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம்.
கன்னி: நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும். கணவன் மனைவிக்குள் அனுகூலம் உண்டு. அலுவலகரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள்.
துலாம்: வீடு, மனை வாங்கும் யோசனை பிறக்கும். தாய் வழி உறவினர்களுடன் இருந்த பகை நீங்கும். அக்கம் பக்கத்தினர் ஆதரவு தருவர். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். பயணங்களால் அலைச்சல்கள் இருந்தாலும் ஆதாயம் உண்டு. அலுவலகத்தில் அமைதி காக்கவும்.
விருச்சிகம்: தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு சில பணிகளை செய்து முடிப்பீர். மனதில் தெளிவு பிறக்கும். உடல்நலம் சீராகும். செலவுகளைக் குறைத்து சேமிப்பை அதிகரிப்பீர். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். வியாபாரம், உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பீர்.
தனுசு: நண்பர்கள் உதவிகரமாக இருப்பர். சகோதரர்கள் பக்கபலமாக இருப்பார்கள். நிலம், வீடு வாங்குவது, விற்பது சாதகமாக முடியும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். கடையை புதிய இடத்துக்கு மாற்றுவீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து நடப்பீர்.
மகரம்: எதிர்ப்பு, ஏமாற்றங்களை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். எதையும் தாங்கும் மனவலிமை கிட்டும். பணவரவு உண்டு. சகோதரர்கள் பக்கபலமாக இருப்பர். வீடு, வாகனத்தை மாற்றுவீர். வியாபாரம் சூடு பிடிக்கும். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்த்து விடவும்.
கும்பம்: எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வரும். புதிய சிந்தனைகள் தோன்றும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். மனைவிவழி உறவினர்களுடன் இருந்த பகை நீங்கும். வாகனத்தை சீர் செய்வீர். அலுவலகத்தில் மதிப்பு உயரும். வியாபாரத்தில் நற்பெயர் கிடைக்கும்.
மீனம்: குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். ஒருவித சலிப்பு, வெறுப்பு, தாழ்வு மனப்பான்மை வந்து போகும். பண விஷயத்தில் கவனம் தேவை. அக்கம் பக்கத்தினருடன் விவாதம் வேண்டாம். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். அலுவலகத்தில் அமைதி காப்பீர்.