12ம் வகுப்பு பொதுத்தேர்வு!. ஹால் டிக்கெட் வெளியீடு!. ஆன்லைனிலும் பதிவிறக்கம் செய்யலாம்!
12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் பதிவெண் உடன் கூடிய பெயர் பட்டியல், ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2-ஆம் தேதி தொடங்க உள்ளது. மார்ச் 2 ஆம் தேதி தமிழ் பாடத் தேர்வும், மார்ச் 5 ஆம் தேதி ஆங்கிலத் தேர்வும் நடைபெற உள்ளது. மார்ச் 9 ஆம் தேதி வேதியியல், மார்ச் 13 ஆம் தேதி இயற்பியல் மற்றும் பொருளாதாரம், மார்ச் 17 ஆம் தேதி கணிதம், விலங்கியல், வணிகவியல் பாடங்களுக்கு தேர்வு நடைபெறுகிறது. மார்ச் 23 ஆம் தேதி உயிரியல், வரலாறு உள்ளிட்ட பாடங்களுக்கும், மார்ச் 26 ஆம் தேதி கணினி அறிவியல், உயிரி வேதியியல் உள்ளிட்ட பாடங்களுக்கும் தேர்வு நடைபெறுகிறது. ஒவ்வொரு தேர்வுக்கும் 3 முதல் 5 நாட்கள் இடைவெளி இருக்கும் வகையில் தேர்வு அட்டவணை வடிவமைக்கப்பட்டுள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முடிவு மே 8 ஆம் தேதியும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில், 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் பதிவெண் உடன் கூடிய பெயர் பட்டியல், ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. geapp.tnschools.gov.in-ல் User ID, Password பயன்படுத்தி ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம். மாணவர்களின் தேர்வு எண்ணுடன் கூடிய பெயர்ப் பட்டியல் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. tnschools.gov.in என்ற தளத்திலும் ஹால் டிக்கெட்டை மாணவர்கள் பதிவிறக்கம் செய்யலாம். 11ம் வகுப்பு அரியர் வைத்துள்ள மாணவர்களின் பெயர் பட்டியலை ஜன.24 முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.