இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தால் பள்ளி மாணவர்களின் கல்வி பாதிப்பு

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தால் பள்ளி மாணவர்களின் கல்வி பாதிப்பு

 சம வேலைக்கு சம ஊதியம் கோரி இடைநிலை ஆசிரியர்களின் தொடர் போராட்டத்தால் தொடக்கப் பள்ளி மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாக பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கையை முன்வைத்து இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கம் (எஸ்எஸ்டிஏ) சார்பில் தமிழகம் முழுவதும் கடந்த டிச.26-ம் தேதி முதல் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. பெரும்பாலான ஆசிரியர்கள் பள்ளிக்கு செல்லாமல் வீடுகளில் இருந்தவாறு தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

கல்வியாளர்கள், பெற்றோர் வலியுறுத்தல்: இந்த போராட்டம் ஒரு மாதத்தை நெருங்கும் சூழலில், தொடக்கப் பள்ளி மாணவர்களின் கற்றல், கற்பித்தல் பணிகள் பாதிக்கப்பட் டுள்ளன.

தற்போதைய சூழலில், பள்ளிகளில் கற்பித்தல் பணிகளில் தற்காலிக ஆசிரியர்கள் ஈடுபட்டு வந்தாலும் மாணவர்களின் நலன் கருதி இந்த பிரச்சினையை சுமுகமாக முடிவுக்கு கொண்டுவர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்வியாளர்கள், பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.