ஜாமீன் கோரி தேவநாதன் மீண்டும் மனு: போலீஸார் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

ஜாமீன் கோரி தேவநாதன் மீண்டும் மனு: போலீஸார் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

 நிதி நிறுவன மோசடி வழக்​கில் சிறை​யில் உள்ள தேவ​நாதன், ஜாமீன் கோரி மீண்​டும் தாக்​கல் செய்​துள்ள மனுவுக்கு போலீ​ஸார் 2 வாரங்​களில் பதிலளிக்க உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

சென்​னை​யில் இயங்கி வந்த ‘தி மயி​லாப்​பூர் இந்து பெர்​மனென்ட் நிதி’ நிறு​வனத்​தில் முதலீடு செய்த நூற்​றுக்​கும் மேற்​பட்ட முதலீட்​டாளர்​களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்​த​தாக அந்த நிதி​ நிறுவன இயக்​குந​ரான தேவ​நாதன் கைது செய்​யப்​பட்டு சிறை​யில் அடைக்​கப்​பட்​டார்.

இந்த வழக்​கில் ரூ.100 கோடியை விசா​ரணை நீதி​மன்​றத்​தில் டெபாசிட் செய்ய வேண்​டும் என்ற நிபந்​தனை​யுடன் சென்னை உயர் நீதி​மன்​றம் அவருக்கு ஜாமீன் வழங்​கியது. ஆனால் அவர் அந்த தொகையை செலுத்​த​வில்லை என்​ப​தால் அவரது ஜாமீன் ரத்து செய்​யப்​பட்​டது.

அதையடுத்து தேவ​நாதன் சென்னை நிதி நிறுவன மோசடி வழக்​கு​களை விசா​ரிக்​கும் சிறப்பு நீதி​மன்​றத்​தில் கடந்த நவம்​பர் மாதம் சரணடைந்து சிறைக்கு சென்​றார். இந்​நிலை​யில் தனக்கு மீண்​டும் ஜாமீன் வழங்​கக் கோரி, சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தேவ​நாதன் மனு தாக்​கல் செய்​துள்​ளார்.

அதில் தனது சொத்​துகளை விற்று முதலீட்​டாளர்​களுக்கு பணத்தை திருப்பி கொடுக்க தயா​ராக இருப்​ப​தாக​வும், இதற்​காக ஓய்​வு​பெற்ற நீதிபதி ஒரு​வரை ஆணை​ய​ராக நியமிக்க வேண்​டும் எனவும் கோரி​யிருந்​தார்.

இந்த வழக்கு நீதிபதி கே.​ராஜசேகர் முன்​பாக விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது போலீ​ஸார் தரப்​பி்ல், தேவ​நாதனுக்கு சொந்​த​மான சொத்​துகளை அடை​யாளம் காண வேண்​டும் என்​ப​தால் இந்த வழக்​கில் அவகாசம் அளிக்க வேண்​டுமென கோரப்​பட்​டது.

அதையடுத்து நீதிப​தி, இந்த வழக்​கில் போலீ​ஸார் 2 வார காலத்​தில் பதிலளிக்க வேண்​டும், என உத்​தர​விட்​டு வி​சா​ரணை​யை தள்ளிவைத்துள்ளார்.