துலாம், விருச்சிகம், தனுசு: வார பலன்கள்
பலன்கள்: இந்த வாரம் கேந்திரங்கள் பலமாக இருப்பதால் தெளிவான மனநிலை இருக்கும். இக்கட்டான சூழ்நிலையில் சாமர்த்தியமாக செயல்பட்டு சாதகமான பலன் பெறுவீர்கள். செயல்திறன் அதிகரிக்கும் ஆனால் உங்களுக்கு எதிராக சிலர் செயல்படும் சூழ்நிலை இருப்பதால் கவனம் தேவை. நெருக்கடியான சமயத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பது தாமதப்படும். தொழில், வியாபாரம் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். ஆனாலும் லாபம் அதிகரிக்கும்.
சில நேரங்களில் முக்கிய முடிவு எடுப்பதில் தயக்கம் காட்டுவீர்கள். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வதன் மூலம் கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையுடன் செயல்பட்டு நிர்வாகத்தினரால் பாராட்டு கிடைக்க பெறுவார்கள். ஆனால் அலைச்சல் உண்டாகும். சக ஊழியர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். கணவன், மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்க மனம் விட்டுபேசுவது நன்மை தரும்.
உறவினர்கள் வருகை இருக்கும். அவர்களிடம் நிதானமாக பேசுவது நன்மை தரும். பெண்களுக்கு எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு காரிய வெற்றி பெறுவீர்கள். கலைத்துறையினருக்கு வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி இருக்கும். அரசியலில் உள்ளவர்களுக்கு முயற்சிகள் பலிதமாகும். மாணவர்களுக்கு செயல்திறமை அதிகரிக்கும். உயர்கல்வி கற்பவர்கள் கூடுதல் கவனத்துடன் பாடங்களை படிப்பது நல்லது.
சித்திரை 3, 4 பாதங்கள்: இந்த வாரம் நல்லது எது கெட்டது எது என்று பிரித்து பார்த்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில திருப்பங்களால் காரிய வெற்றி கிடைக்கும். தொழில் வியாபாரம் திருப்தி தரும். தொழிலில் முன்னேற்றம் காண வாய்ப்புகள் வந்து சேரும். நிதானமாக பேசுவதன் மூலம் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி கிடைக்கலாம். சிலர் கட்டளையிடுகின்ற பதவி கிடைக்க பெறுவார்கள். குடும்பத்தில் திடீர் செலவு ஏற்படும். குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து அதன் மூலம் அவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள்.
சுவாதி: இந்த வாரம் தம்பதிகளிடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். வழக்குகளை தள்ளிப் போடுவதும் சமாதான முறையில் பேசி தீர்த்துக்கொள்வதும் நல்லது. தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரிய வெற்றி பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உத்தியோகத்தில் வெற்றி பெற கூடுதல் முயற்சி மேற்கொள்வது நல்லது. சக ஊழியர்களுடன் நிதானமாக பேசி பழகுவது நன்மை தரும். புத்தி கூர்மையுடன் செயல்பட்டு எந்த சிக்கலையும் தீர்க்கும் ஆற்றல் அதிகரிக்கும். எந்த ஒரு விஷயத்தையும் கவனமுடன் கையாள்வது நல்லது.
விசாகம் 1, 2, 3ம் பாதங்கள்: இந்த வாரம் முக்கிய நபர்களின் உதவிகள் கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை ஏற்படும். எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலாக செய்து வெற்றி பெறுவீர்கள். தொழில் வியாபாரம் விறுவிறுப்படையும். கடந்த காலங்களில் இருந்த மந்த நிலை மாறும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளின் சொல்படி நடந்து கொள்வது நல்லது. பண வரத்து திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் கலகலப்பு இருக்கும். கூடவே மனதில் ஒருவித கவலையும் இருந்து வரும்.
பரிகாரம்: ஸ்ரீ சரஸ்வதி தேவதையை பூஜித்து வர அறிவுத் திறமை அதிகரிக்கும். கல்வியில் வெற்றி உண்டாகும்.
பலன்கள்: இந்த வாரம் தைரியம் அதிகரிக்கும். எல்லா விதத்திலும் நன்மையை தரும். சகோதரர்களால் நன்மை உண்டாகும். காரிய வெற்றி ஏற்படும். பண வரத்து கூடும். எதிர்பாலினத்தாருடன் பழகும் போது கவனம் தேவை. எதிர்ப்புகள் குறையும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழ் நிலையில் உள்ளவர்களால் லாபம் கிடைக்கும். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள்.
தேவையான சரக்குகள் கையிருப்பு இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதையும் செய்து முடிப்பதில் துணிச்சல் உண்டாகும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். எதிர்பாரத இடமாற்றம் ஏற்படலாம். கணவன், மனைவிக்கு இடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். குடும்ப விஷயங்களில் சரியான முடிவுக்கு வர முடியாத தடுமாற்றம் ஏற்படலாம்.
உறவினர்களுடன் பேசும்போது கவனமாக பேசுவது நல்லது. பெண்களுக்கு எதையும் வெற்றிகரமாக செய்து முடித்து ஆதாயம் அடைவீர்கள். கலைத்துறையினருக்கு எதிர்ப்புகள் குறையும். அரசியல்துறையினருக்கு பண வரத்து கூடும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் ஆர்வம் உண்டாகும். கல்வியில் தேர்ச்சி பெறவும் கூடுதல் மதிப்பெண் பெறவும் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும்.
விசாகம் 4ம் பாதம்: இந்த வாரம் வாழ்க்கை துணையுடன் எதையும் பேசி தீர ஆலோசித்து செய்வது நன்மை தரும். பிள்ளைகள் அன்பு செலுத்துவார்கள். ஆனால் அவர்களுக்காக செலவு செய்ய நேரிடும். எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலாக செய்து முடிப்பீர்கள். தேவையான உதவிகள் கிடைக்கும். சுறுசுறுப்பு காணப்படும். அடுத்தவரை அனுசரித்து செல்வீர்கள். எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக நடக்கும். எதிர்பாராத சில சம்பவங்கள் நடக்கலாம். அதனால் உங்களுக்கு நன்மையும் உண்டாகலாம். ஆன்மிக பணிகளில் நாட்டம் அதிகரிக்கும்.
அனுஷம்: இந்த வாரம் தொழில், வியாபாரம் எதிர்பார்த்ததை விட சற்று நிதானமாகவே நடக்கும். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்ற நிலை காண்பார்கள். மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிலும் நிதானமாக செயல்படுவதும் மற்றவர்களை அனுசரித்து போவதும் நல்லது. குடும்பத்தில் இருந்து பிரிந்து சென்ற நபர் மீண்டும் வந்து போவார்கள். அதனால் மகிழ்ச்சி உண்டாகும். வாழ்க்கை துணைக்காக செலவு செய்ய நேரிடும்.
கேட்டை: இந்த வாரம் வழக்குகளில் நிதான போக்கு காணப்படும். எதிர்பாராமல் நடக்கும் சம்பவங்களால் நன்மை உண்டாகும். மன குழப்பம் நீங்கும். அலுவலகத்தில் ஆவணங்கள் தொடர்பான சந்தேகங்கள் உண்டாகலாம். உடனுக்குடன் அவற்றை கேட்டு தெரிந்து கொள்வது நல்லது. எடுத்த காரியத்தை சோர்வடையாமல் தொடர்ந்து செய்து முடிப்பீர்கள். பண வரத்து அதிகரிக்கும். எடுத்த காரியங்கள் எல்லாம் கை கூடச் செய்யும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். எதிர்ப்புகள் விலகும். பயணம் மூலம் லாபம் கிடைக்க கூடும். புதிய நபர்கள் நட்பு கிடைக்கும்.
பரிகாரம்: ஸ்ரீ பைரவரை தீபம் ஏற்றி வழிபட்டு வர எல்லா நன்மைகளும் உண்டாகும். தடை நீங்கி காரியங்கள் வெற்றிகரமாக நடந்து முடியும்.
பலன்கள்: இந்த வாரம் மற்றவர்களுக்காக வாதாடி வெற்றி பெறுவீர்கள். முன் கோபம் குறையும். பேச்சினால் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் நீங்கி பிரிந்தவர்கள் மீண்டும் நட்பு பாராட்டுவார்கள். பண வரத்து அதிகரிக்கும். மனதில் புது தெம்பும் உற்சாகமும் தோன்றும். எதிர்பாரத உதவியால் நன்மை ஏற்படும். தொழில் வியாபாரம் தொடர்பாக இழுபறியாக இருந்த சில பிரச்சனைகள் நல்ல முடிவுக்கு வரும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும்.
ஏற்கனவே வியாபாரம் தொடர்பாக செய்து பாதியில் நின்ற பணிகளை மீண்டும் செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். பண வரத்து திருப்தியாக இருக்கும். புதிய பொறுப்புகள் ஏற்படலாம். விரும்பிய இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். கணவர், மனைவிக்கு இடையே ஒற்றுமை உண்டாகும். குடும்பத்தில் அமைதி எற்படும். உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும்.
குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். பெண்களுக்கு மனதில் புது தெம்பும் உற்சாகமும் அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு எதிர்பாராத செலவுகள் உண்டாகும். அரசியலில் உள்ளவர்களுக்கு மற்றவர்களால் மன கஷ்டம் ஏற்படும். மாணவர்களுக்கு பாதியில் நிறுத்திய கல்வி தொடர்பான விஷயங்களை மீண்டும் தொடர்வீர்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.
மூலம்: இந்த வாரம் தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பேச்சின் இனிமை புத்திசாலித்தனம் இவற்றால் முன்னேற்றம் பெறுவார்கள். சிலருக்கு புதிய ஆர்டர்களும் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களது பேச்சினால் மேல் அதிகாரிகளை கவர்ந்து விடுவார்கள். எதிர்பார்த்த உதவியும் நன்மைகள் நடக்கும். ஆனால் பொருட்களை கவனமாக வைத்துக் கொள்வது நல்லது. குடும்பத்தில் இருந்த இறுக்கம் நீங்கி மனம் மகிழ்ச்சியடையும் விதமாக சம்பவங்கள் நடக்கலாம். உறவினர் மூலம் தேவையான உதவியும் கிடைக்கும்.
பூராடம்: இந்த வாரம் குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். வழக்குகளை தள்ளிப்போடுவது நல்லது. எடுத்த காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் நன்மை உண்டாகும். ஆனால் குடும்ப விஷயங்களை கூறாமல் தவிர்ப்பது நல்லது. இறைவனை நம்புவீர்கள். சோதனைகளை உரத்த நெஞ்சோடு எதிர்கொண்டு சாதனைகளாக மாற்றுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறை இருக்காது. கணவன்-மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும். அக்கம்பக்கத்தாரிடமும் வீண் பேச்சை தவிர்க்கவும். சிலரது வீட்டில் பொருட்கள் திருட்டு போக வாய்ப்பு உண்டு.
உத்திராடம் 1ம் பாதம்: இந்த வாரம் விருந்து விழா என்று சென்று வருவீர்கள். தடைபட்ட திருமணம் கைகூடும். குடும்பத்தில் சிற்சில பிணக்குகள் வரலாம் புதிய வீடு கட்ட வாய்ப்பு உண்டு. குடும்ப பெரியோர்களின் ஆலோசனையை கேட்டு நடப்பது நல்லது. இளைய சகோதர சகோதரிகளின் மூலம் மிகுந்த நன்மைகள் கிடைக்கும். பிரிந்திருந்த தம்பதிகள் ஒன்று சேர்வார்கள். நன்மைகள் தொடர்ந்த வண்ணம் இருக்கும். பணப் பிரச்சனைகளில் உங்களை திக்குமுக்காட வைத்தாலும் அவ்வப்போது பணவரவிற்கு குறையிருக்காது. குடும்பச் செலவுகளை எப்படியும் சமாளிக்க வாழ்க்கைத் துணை உதவுவார். பூர்வீக சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சனைகள் முடிவிற்கு வரும்.
பரிகாரம்: ராமாயணத்தில் சுந்தர காண்டம் பாராயணம் செய்வது மன குழப்பத்தை போக்கும். காரிய வெற்றி உண்டாகும்.