இனி ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு இது கட்டாயம்.. இன்று முதல் அமலுக்கு வரும் புது ரூல்ஸ்!
ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்தில் முன்பதிவு தொடங்கிய முதல் நாளில் ரயில் டிக்கெட் பெறுவதற்கு இன்று முதல் ஆதார் இணைப்பு கட்டாயம் என்று இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.
இடைத்தரகர்களைத் தடுக்கவும், உண்மையான பயணிகளுக்கு முன்னுரிமை அளிக்கவும் இந்திய ரயில்வே பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி, முன்பதிவு தொடங்கிய முதல் 15 நிமிடங்களுக்கு ஐ.ஆர்.சி.டி.சி. செயலி அல்லது வலைதளம் மூலம் முன்பதிவு செய்ய ஆதார் கட்டாயமாக்கப்பட்டது.
பின்னர், ஆதார் சரிபார்க்கப்பட்ட பயனாளர்கள் முன்பதிவு தொடங்கிய முதல் நாளில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை முன்பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், முன்பதிவு தொடங்கிய முதல் நாளில் ரயில் டிக்கெட் பெறுவதற்கு இன்று முதல் ஆதார் இணைப்பு கட்டாயம் என இந்திய ரயில்வே அறிவித்துள்ளது.
அதேநேரம், ரயில் நிலைய கவுண்டர்களில் டிக்கெட் முன்பதிவு செய்யும் முறையில் எந்த மாற்றமும் இல்லை எனவும், ரயில் நிலைய கவுண்டர்களில் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆதார் சரிபார்ப்பு தேவையில்லை என்றும் ரயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.