மாதம் ரூ. 1 லட்சம் சம்பளம்... உடனே அப்ளை பண்ணுங்க!

மாதம் ரூ. 1 லட்சம் சம்பளம்...  உடனே அப்ளை பண்ணுங்க!
இந்திய உச்ச நீதிமன்றத்தில் ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ள பட்டதாரிகள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
பணியின் பெயர்: சட்டம் கிளர்க் - ரிசர்ச் அசோசியேட் (Law Clerk-cum-Research Associate)
மொத்த காலியிடங்கள்: 90
ஊதியம்: மாதம் ரூ. 1,00,000/- (நிச்சயிக்கப்பட்ட ஊதியம்)
கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பு (B.L./LL.B.) முடித்திருக்க வேண்டும். இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களும் சில நிபந்தனைகளுடன் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு: 07.02.2026 தேதியின்படி, விண்ணப்பதாரர்கள் 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர்கள் பின்வரும் நிலைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்:
எழுத்துத்தேர்வு
சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை
ஆர்வமுள்ளவர்கள் www.sci.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 750 (ஆன்லைன் மூலமாகச் செலுத்த வேண்டும்).
தமிழகத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் எளிதாகத் தேர்வு எழுத சென்னை தேர்வு மையமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் எழுத்துத்தேர்வு மற்றும் நேர்காணல் அடிப்படையில் தகுதியின் முன்னுரிமைப்படி தேர்வு செய்யப்படுவார்கள்.