“அன்புமணி மீது குற்ற வழக்கு பதிவு செய்ய வேண்டும்” – ராமதாஸ்

“அன்புமணி மீது குற்ற வழக்கு பதிவு செய்ய வேண்டும்” –  ராமதாஸ்
பாமகவின் பெயரை பயன்படுத்தி அதிமுகவுடன் சட்டவிரோதமாக அன்புமணி கூட்டணி அமைத்துள்ளதாக குற்றம்சாட்டி உள்ள ராமதாஸ், இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதி உள்ளார்.
அந்த கடிதத்தில், அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இருந்த பாமக பல எம்.எல்.ஏ.க்கள், பல எம்.பி.க்களை வைத்திருந்ததாக தெரிவித்துள்ளார். கட்சியின் தலைவராக அன்புமணி இருந்த போது தேர்தலில் பாமக தோல்வியை சந்தித்ததால் அங்கீகாரத்தை இழந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பல மோசடிகளை செய்து தனது தலைமை காலத்தை நீடிப்பதற்கான ஆவணத்தை இந்திய தேர்தல் ஆணையத்திடம் அன்புமணி பெற்றதாகவும் அவர் குற்றம்சாட்டி உள்ளார்.