திமுக கூட்டணியில் ராமதாஸ்... அமைச்சர் சொன்ன முக்கிய அப்டேட்!

திமுக கூட்டணியில் ராமதாஸ்... அமைச்சர் சொன்ன முக்கிய அப்டேட்!
திமுக கூட்டணியில் இணைவது தொடர்பாக ராமதாஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
ராமதாஸ் - அன்புமணி இடையே மோதல் போக்கு நிலவி வரும் சூழலில், பாமக இரு அணிகளாக செயல்பட்டு வருகிறது. தேர்தல் நெருங்கும் சூழலில், அன்புமணி தலைமையிலான பாமக, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துள்ளது. இதையடுத்து, ராமதாஸின் கூட்டணி நிலைப்பாடு குறித்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சில தினங்கள் முன் தைலாபுரம் இல்லத்தில் கட்சியினரிடம் விருப்ப மனு வாங்கிய ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், "நான்காண்டு கால ஸ்டாலின் ஆட்சி எல்லாம் நன்றாகத்தான் உள்ளது" என்று கூறினார். அப்போது அவரிடம் விசிக தலைவர் திருமாவளவன் இருக்கும் கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, "அரசியலில் எதுவும் வேண்டுமானாலும்; என்ன வேண்டுமானாலும் நடக்கும்; எதிர்பார்க்காதவை கூட நடக்கும்; எதுவும் நடக்காது என்று சொல்ல முடியாது" என்று பேசினார்.