தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி 20 தொடர்: கில், பாண்டியா இந்திய அணிக்கு திரும்பினர்
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையே 5 ஆட்டங்கள் கொண்ட டி 20 கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இதன் முதல் ஆட்டம் வரும் டிசம்பர் 9-ம் தேதி கட்டாக்கில் நடைபெறுகிறது.
தொடர்ந்து 2-வது ஆட்டம் 11-ம் தேதி சண்டிகரிலும், 3-வது ஆட்டம் 14-ம் தேதி தரம்சாலாவிலும், 4-வது ஆட்டம் 17-ம் தேதி லக்னோவிலும் கடைசி மற்றும் 5-வது ஆட்டம் 19-ம் தேதி அகமதாபாத்திலும் நடைபெறுகிறது. இந்த தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
தற்போது நடைபெற்று வரும் ஒருநாள் போட்டித் தொடரிலும் அவர், பங்கேற்கவில்லை. காயத்தில் இருந்து குணமடைந்துள்ள நிலையில் ஷுப்மன் கில் டி 20 அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அணியில் அவர், சேர்க்கப்பட்டுள்ள போதிலும், பிசிசிஐ சிறப்பு மையம் தகுதி சான்றிதழ் வழங்கினால் மட்டுமே போட்டியில் பங்கேற்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய அணி: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஷுப்மன் கில், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்சர் படேல், ஜிதேஷ் சர்மா, சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ், ஜஸ்பிரீத் பும்ரா, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா.