சூர்யாவுடன் இணையும் ஃபகத் பாசில்?

சூர்யாவுடன் இணையும் ஃபகத் பாசில்?

சூர்யா நடிக்கவுள்ள அடுத்த படத்தில் ஃபகத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக தெரிகிறது.

’ஆவேஷம்’ இயக்குநர் ஜீத்து மாதவன் இயக்கவுள்ள அடுத்த படத்தில் நாயகனாக நடிக்கவுள்ளார் சூர்யா. இதன் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதனை சூர்யா தொடங்கியுள்ள புதிய தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ளது. நீண்ட வருடங்கள் கழித்து இதில் காவல்துறை அதிகாரியாக சூர்யா நடிக்கவுள்ளார்.

இப்படத்தில் சூர்யாவுடன் ஃபகத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தெரிகிறது. மேலும், நஸ்ரியாவும் சூர்யாவுடன் நடிக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. ‘ஆவேஷம்’ படத்தின் மூலம் ஜீத்து மாதவன் – ஃபகத் பாசில் நெருங்கிய நண்பர்களாக வலம் வருகிறார்கள். இதனை வைத்தே ஃபகத் பாசில், நஸ்ரியா உள்ளிட்டோர் இதில் நடிக்க சம்மதம் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.

தற்போது வெங்கி அட்லுரி இயக்கி வரும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் சூர்யா. இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. அதனை முடித்துவிட்டு ஜீத்து மாதவன் படத்தில் கவனம் செலுத்தவுள்ளார். இதன் படப்பிடிப்பு தமிழக – கேரள எல்லைப் பகுதிகளில் நடத்த படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.