“10 கூட்டணி, 8 கூட்டணியை முறியடிக்கும் சக்தி விஜய்க்கு தான் உள்ளது..” தவெக செயல்வீரர்கள் கூட்டத்தில் செங்கோட்டையன் பேச்சு!

“10 கூட்டணி, 8 கூட்டணியை முறியடிக்கும் சக்தி விஜய்க்கு தான் உள்ளது..” தவெக செயல்வீரர்கள் கூட்டத்தில் செங்கோட்டையன் பேச்சு!
செயல்வீரர்கள் கூட்டத்தில் மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் பேசினார்.
தவெகவுக்கு தேர்தல் ஆணையம் விசில் சின்னம் ஒதுக்கியுள்ள நிலையில் அக்கட்சித் தலைவர் விஜய் தலைமையில், நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக வெற்றிக் கழகம் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. அந்த வகையில் கடந்த 20 ஆம் தேதி சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் தேர்தல் அறிக்கை குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து தேர்தல் பரப்புரைக் குழு ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது. இந்நிலையில் தவெக தலைவர் விஜய் தலைமையில் மாநில மாவட்ட அளவிலான செயல்வீரர்கள் கூட்டம் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் எதிர்வரும் சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ள நிலையில் க்யூ ஆர் குறியீட்டுடன் கூடிய அனுமதிச் சீட்டு வைத்திருப்பவர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் ஜனநாயகன் படத்திற்கான தணிக்கைச் சான்று விவகாரம், கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் சிபிஐ விசாரணை என தொடர் நெருக்கடிகளை சந்தித்து வரும் அக்கட்சியின் தலைவர் விஜய், தலைமையில் நடைபெறவுள்ள இன்றைய ஆலோசனை கூட்டம் தவெக தொண்டர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், மாமல்லபுரத்தில் நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் மாநில நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் பேசுகையில், "திமுகவை வீழ்த்தக்கூடிய ஒரே தலைவர் விஜய். பத்து கூட்டணி, எட்டு கூட்டணி இதையெல்லாம் முறியடிக்கும் சக்தி விஜய்க்கு தான் உள்ளது." என்று பேசினார்.