'பாமகவில் எந்த பிரிவும் இல்லை' - அன்புமணி ஆதரவு எம்எல்ஏ சிவக்குமார் விளக்கம்

'பாமகவில் எந்த பிரிவும் இல்லை' - அன்புமணி ஆதரவு எம்எல்ஏ சிவக்குமார் விளக்கம்

பாமகவில் எந்த பிரிவு இல்லை என அக்கட்சி எம்எல்ஏ சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

விழுப்புரத்தில் தமிழ்நாடு பாட்டாளி கட்டுமானம் அமைப்பு சாரா ஆட்டோ தொழிற்சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அன்புமணியின் ஆதரவாளரும், சட்டமன்ற உறுப்பினருமான சிவக்குமார் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ''கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற பொதுக்குழுவில், வரும் ஆகஸ்ட் 26ஆம் தேதி வரை அன்புமணி ராமதாஸ் கட்சித் தலைவராக தொடருவார் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனை தேர்தல் ஆணையமும் அங்கீகரித்துள்ளது.

தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்பாக தகவலை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தான் தெரிவிப்பார். விரைவில் வெற்றி கூட்டணி அமையும். பாமக இடம்பெறும் கூட்டணியே சட்டமன்ற தேர்தலில் ஆட்சி அமைக்கும்.

அன்புமணி ராமதாஸ் மத்திய அமைச்சராக இருந்த போது குறிப்பிடத்தக்க சாதனைகளை புரிந்துள்ளார். தற்போது கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வழியில் கட்சி செயல்பட்டு வருகிறது. பாமகவில் எந்த பிரிவும் இல்லை, பாமக மேலும் வலுப்பெற்று வருகிறது. சிலரின் சூழ்ச்சியால் ஏற்பட்டுள்ள பிரச்சனை விரைவில் தீர்க்கப்படும். அன்புமணி தலைமையில் பாமக தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது'' என்றும் தெரிவித்தார்.